பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தன்கட் செயல்.குறள்:832 ஒருவனுக்கு பேதைமை எல்லாவற்றிலும் மிக்க பேதைமை, தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் தன் விருப்பத்தை செலுத்துதல் ஆகும். Advertisements

நேற்று பேருந்தில் வருகையில் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்த்துப் படிக்க வைக்க பெற்றோர்கள் விரும்புவதில்லை என்ற பேச்சு எழுந்தபோது ஒருவர் சற்றுக்கோபமாகவே ‘இதற்கெல்லாம் ஆசிரியர்களே முழுக்காரணம்’ என குறைபட்டுக்கொண்டார். ஓரளவு உண்மைதானே? அரசிடம் சம்பளம் பெற்றுக்கொண்டு தம்பிள்ளைகளை தனியார்பள்ளிகளில் சேர்த்துப் படிக்கவைத்தால் மற்றவர்கள் எப்படி தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்த்துப்படிக்கவைக்க முன்வருவார்கள்? அரசுப்பணியாளர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளியில்தான் சேர்த்துப் படிக்கவைக்கவேண்டுமென சட்டம் இயற்றுவதே அரசுப்பள்ளிகளில் மாணவர்சேர்க்கை அதிகரிப்பதற்குத் தீர்வாக அமையும். கவனத்தில் கொள்ளுமா அரசு?

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல்.குறள்:831 பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை கைவிடுதலாகும்.

ஊழலில் சிக்கி, உள்சிறையில் உறைந்து பிணை மீளலில் வெளிவந்தவரை வாழ்த்துமடலால் பாடுகின்றனர் முயல்கூட்டம் சிங்கத்தின் எதிர்நிற்பதோ வென்று! அறியாரோ அவர்கள் குறுமுயலால் சிங்கம் வீழ்ந்ததை!

பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு அகநட்பு ஒரீஇ விடல். குறள்:830 பகைவருடன் பழகிடும் காலம் வருமேயானால் அகத்தளவில் இல்லாமல் முகத்தளவில் மட்டும் நட்புச் செய்து பின்னர் நட்பையும் விட்டுவிட வேண்டும்.

நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் ஒல்லை உணரப் படும்.குறள் :826 நண்பர்போல் நன்மையானவற்றைச் சொன்னபோதிலும் பகைமை கொண்டவர் சொல்லும் சொற்களின் உண்மைத் தன்மை விரைவில் உணரப்படும்.

மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும் சொல்லினால் தேறற்பாற்று அன்று.குறள்:825 மனத்தால் தம்மொடு பொருந்தாமல் பழகுகின்றவரை அவர் கூறுகின்ற சொல்லைக் கொண்டு எத்தகைய ஒரு செயலிலும் நம்பித் தெளியக்கூடாது.