Monthly Archives: January 2015

நாலடியார் கூறும் நன்னெறி!

செய்கை யழிந்து சிதல்மண்டிற் றாயினும் பொய்யா ஒருசிறை பேரில் உடைத்தாகும்; எவ்வம் உழந்தக் கடைத்துங் குடிப்பிறந்தார் செய்வர் செயற்பா லவை. 147 கட்டுக் குலைந்து கறையான் பிடித்திருந்தாலும் பெரிய வீடானது, மழைநீர் ஒழுகாத ஒரு பக்கத்தை உடையதாயிருக்கும். அதுபோல, எத்தகைய வறுமைத் துன்பங்களில் ஆழ்ந்திருந்தாலும் நற்குடிப்பிறந்தோர் தம்மால் இயன்ற நற்செயல்களைச் செய்வர்.

157. வீடுறாப் பிறவி விழற்கிறைத்த நீரே!

இறந்த பிறப்பிற்றாஞ் செய்த வினையைப் பிறந்த பிறப்பால் அறிக–பிறந்திருந்து செய்யும் வினையால் அறிக இனிப்பிறந்(து) எய்தும் வினையின் பயன். மக்களாகப் பிறந்த ஒவ்வொருவரும்,முற்பிறப்பில்,செய்த நல்வினை தீவினைகளை, பிறந்த இப் பிறவியில் அடைகின்ற இன்ப துன்பங்களால் அறிவார்களாக,இனி வறுமையில் அடையும் இன்ப துன்பங்களையும், இம்மையில் தாம் பிறந்து செய்யும் நல்வினை தீவினைகளால் அறிவார்களாக.

இன்தமிழ் குறளோவியம்!

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.குறள்:307 நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும். அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்.

நாலடியார் கூறும் நன்னெறி!

இனநன்மை இன்சொல்ஒன்று ஈதல்மற் றேனை மனநன்மை என்றிவை யெல்லாம் – கனமணி முத்தோடு இமைக்கும் முழங்குவரித் தண்சேர்ப்ப! இற்பிறந்தார் கண்ணே யுள. 146 சிறந்த மாணிக்க மணிகள் முத்துக்களுடன் சேர்ந்து ஒளி வீசுவதற்கு இடமான ஒலிக்கும் கடலின் குளிர்ச்சி பொருந்திய கரையையுடைய வேந்தனே! நல்லோர் தொடர்பு, இன்சொல் கூறுதல், வறியார்க்கு ஒன்றைக் கொடுத்தல் மற்றும் மனத்தூய்மை என்னும் இப்படிப்பட்ட நற்குணங்கள் எல்லாம் நல்லகுடியில் பிறந்தவரிடம் பொருந்தியிருக்கின்றன.

156. நல்வினை தீவினைகளே ஒருவரின் நற்பிறப்புத் தீப்பிறப்புக்குக் காரணம்!

இறந்த பிறப்பிற்றாஞ் செய்த வினையைப் பிறந்த பிறப்பால் அறிக–பிறந்திருந்து செய்யும் வினையால் அறிக இனிப்பிறந்(து) எய்தும் வினையின் பயன். மக்களாகப் பிறந்த ஒவ்வொருவரும், முற்பிறப்பில் செய்த நல்வினை தீவினைகளை, பிறந்த இப் பிறவியில் அடைகின்ற இன்ப துன்பங்களால் அறிவார்களாக! இனி வறுமையில் அடையும் இன்ப துன்பங்களையும் இம்மையில் தாம் பிறந்து செய்யும் நல்வினை தீவினைகளால் அறிவார்களாக!

இன்தமிழ் குறளோவியம்!

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும்.குறள்:306 சினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சினமென்னும் தீயே இருப்பதால், அது அவரை மட்டுமின்றி, அவரைப் பாதுகாக்கும் தோணி போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும்.

நாலடியார் கூறும் நன்னெறி!

கல்லாமை அச்சம் கயவர் தொழிலச்சம் சொல்லாமை யுள்ளுமோர் சோர்வச்சம்; – எல்லாம் இரப்பார்க்கொன் றீயாமை அச்சம்; மரத்தாரிம் மாணாக் குடிப்பிறந்தார் உயர்குடிப் பிறந்தோர் (தாம்) கல்லாமைக்கு அஞ்சுபவர்; கீழோர்க்குரிய இழிதொழிலைச் செய்ய அஞ்சுவர்; தகாத சொற்களை வாய் தவறிச் சொல்லி விடுவோமோ என அஞ்சுவர்; இரப்பார்க்கு ஒன்றும் தடி முடியாமை நேருமோ என அஞ்சுவர். (இவ்வாறு அச்சம் கொள்ளுதல் உயர்குடிப் பிறந்தார் இயல்பாகும்). ஆதலால் இத்தகைய மாண்புகள் அற்ற குடியிற் பிறந்தவர்கள் மரம் போல்வர் ஆவர்.