Monthly Archives: June 2015

நாலடியார் கூறும் நன்னெறி!

வழங்காத செல்வரின் நல்கூர்ந்தார் உய்ந்தார்; இழந்தார் எனப்படுதல் உய்ந்தார் – உழந்ததனைக் காப்புய்ந்தார் கல்லுதலும் உய்ந்தார்தங் கைந்நோவ யாப்புய்ந்தார் உய்ந்த பல. 277 ஒருவருக்கு ஒன்றைக் கொடாத செல்வரைவிட வறுமையாளரே பல துன்பங்களிலிருந்து தப்பியவர் ஆவர். எவ்வாறெனில், ‘செல்வத்தையெல்லாம் இழந்தார்’ என உலகோர் பழிக்கும் பழிச் சொல்லினின்றும் தப்பினர்; வருந்திச் செல்வத்தைக் காத்தலின்றும் தப்பினர்; அச்செல்வத்தைப் பிறர் அறியாதவாறு புதைப்பதற்காக நிலத்தைத் தோண்டும் துன்பத்தினின்றும் தப்பினர். இப்படி அவ்வறியவர் தப்பினவை பல உண்டு. Advertisements

இன்தமிழ் குறளோவியம்!

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல்.குறள்:443 பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல் எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும்.

நாலடியார் கூறும் நன்னெறி!

எனதெனது என்றிருக்கும் ஏழை பொருளை எனதெனது என்றிருப்பன் யானும் – தன தாயின் தானும் அதனை வழங்கான் பயன்துவ்வான் யானும் அதனை அது. 276 அறிவில்லாதவன், தான் சேர்த்த பொருளை, ‘என்னுடையது என்னுடையது’ என்று சொல்லிக் கொண்டு இருப்பான். நானும் அப்பொருளை ‘என்னுடையது என்னுடையது’ என்று எண்ணிக் கொண்டிருப்பேன். ஏனெனில், அ·து அவனுடைய பொருளாக இருத்தலின் அதனைப் பிறர்க்குக் கொடுக்க மாட்டான்; தானும் அனுபவிக்க மாட்டான். அது போலவே நானும், அப்பொருளைப் பிறர்க்குத் தராமலும், நான் அனுபவிக்காமலும் […]

இன்தமிழ் குறளோவியம்!

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல்.குறள்:442 வந்துள்ள துன்பத்தைப் போக்கி, மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்.

நாலடியார் கூறும் நன்னெறி!

எறிநீர்ப் பெருங்கடல் எய்தி யிருந்தும் அறுநீர்ச் சிறுகிணற்று ஊறல்பார்த்து உண்பர் மறுமை அறியாதார் ஆக்கத்தின் சான்றோர் கழிநல் குரவே தலை. 275 மோதுகின்ற அலைகளையுடைய கடலை அடைந்திருந்தாலும், அதன் நீர் பயன்படாததால், மக்கள் அடிக்கடி நீர் வற்றிப் போகும் சிறு கிணற்றினது ஊற்றினையே தேடிக்கண்டு பருகுவர் ஆதலால் மறுமை இன்பத்தை நாடி அறம் செய்தலை அறியாதாரின் செல்வத்தைவிடச் சான்றோரின் மிக்க வறுமையே மேலானது.

இன்தமிழ் குறளோவியம்!

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல்.குறள்:441 அறமுணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

நாலடியார் கூறும் நன்னெறி!

கொடுத்தலும் துய்த்தலும் தேற்றா இடுக்குடை உள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம் – இல்லத்து உருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்தால் ஏதிலான் துய்க்கப் படும். 274 பிறர்க்குத் கொடுப்பதையும், தான் அனுபவிப்பதையும் அறியாத உலோப குணமுடையவன் அடைந்த பெரும் செல்வமானது, வீட்டில் பிறந்த அழகிய கன்னிப் பெண்களைப் பருவ காலத்தில் பிறர் அனுபவிப்பது போல, அயலானால் அனுபவிக்கப்படும்.