Monthly Archives: July 2015

நாலடியார் கூறும் நன்னெறி!

என்பாய் உகினும் இயல்பிலார் பின்சென்று தம்பாடு உரைப்பரோ தம்முடையார்; – தம்பாடு உரையாமை முன்னுணரும் ஒண்மை உடையார்க்கு உரையாரோ தாமுற்ற நோய். 292 தம் மானத்தைக் காப்பவர், பசி நோயால் உடல் வற்றி எலும்புக் கூடாகி அழியும் நிலை நேர்ந்தாலும், தகுதியில்லாதார் பின்னே சென்று தமது வறுமையை எடுத்துக் கூறுவரோ? கூறமாட்டார்கள். சொல்லாமலே குறிப்பால் அறிந்துகொள்ளும் பேரறிவு உடையாரிடம் தமது துன்பத்தினைக் கூறாமலிருப்பரோ? கூறுவார்கள்.

இன்தமிழ் குறளோவியம்!

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல்.குறள்:460 நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாக இருப்பதும், தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தரக்கூடியதும் எதுவுமே இல்லை.

நாலடியார் கூறும் நன்னெறி!

திருமதுகை யாகத் திறனிலார் செய்யும் பெருமிதம் கண்டக் கடைத்தும் – எரிமண்டிக் கானத் தலைப்பட்ட தீப்போல் கனலுமே, மான முடையார் மனம். 291 செல்வச் செருக்கினால் நற்குணம் இல்லாதார் செய்யும் அவமதிப்பைக் கண்டபோது, மானம் உடையார் மனத்தில், காட்டிலே பற்றிப் படர்ந்து எறியும் தீப்போல அனல் மிகும்.

இன்தமிழ் குறளோவியம்!

மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும் இனநலத்தின் ஏமாப் புடைத்து.குறள்:459 நல்ல உறுதியான உள்ளம் படைத்த உயர்ந்தோராக இருந்தாலும் அவர் சார்ந்த இனத்தின் உறுதியும் அவருக்கு வலிமையான துணையாக அமையக் கூடியதாகும்.

நாலடியார் கூறும் நன்னெறி!

ஆர்த்த பொறிய அணிகிளர் வண்டினம் பூத்தொழி கொம்பின்மேல் செல்லாவாம் – நீர்த்தருவி தாழா உயர்சிறப்பின் தண்குன்ற நன்னாட! வாழாதார்க் கில்லை தமர். 290 நீரையுடைய அருவிகள் ஒரு காலத்தும் மாறாமல் விழுகின்ற சிறப்பினையுடைய மலை நாட்டு மன்னனே! நிறைந்த புள்ளிகளையுடைய வண்டினம், பூத்து உதிர்ந்த கொம்பின் மேல் செல்லமாட்டா, அது போல பொருள் பெற்று வாழாதார்க்கு உறவினர் இல்லை.

இன்தமிழ் குறளோவியம்!

மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப் புடைத்து.குறள்:458 மனவளம் மிக்க சான்றோராக இருப்பினும் அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொருத்தே வலிமை வந்து வாய்க்கும்.

நாலடியார் கூறும் நன்னெறி!

ஆர்த்த பொறிய அணிகிளர் வண்டினம் பூத்தொழி கொம்பின்மேல் செல்லாவாம் – நீர்த்தருவி தாழா உயர்சிறப்பின் தண்குன்ற நன்னாட! வாழாதார்க் கில்லை தமர். 290 நீரையுடைய அருவிகள் ஒரு காலத்தும் மாறாமல் விழுகின்ற சிறப்பினையுடைய மலை நாட்டு மன்னனே! நிறைந்த புள்ளிகளையுடைய வண்டினம், பூத்து உதிர்ந்த கொம்பின் மேல் செல்லமாட்டா, அது போல பொருள் பெற்று வாழாதார்க்கு உறவினர் இல்லை