Monthly Archives: August 2015

உபதேசமெல்லாம் ஊருக்குத்தான் !

மூடநம்பிக்கையை எதிர்த்து மேடைகளில் முழங்கியோர் பலர் தனக்கென இடையூறு வரும் வேளையில் இடையூறுக்கான காரணம் கண்டறிந்து நீக்குவதை விடுத்து தாங்களும் மூடத்தனமானக் காரியங்களில் ஈடுபடுவது உபதேசமெல்லாம் ஊருக்குத்தான் என்றாகிவிடாதா? Advertisements

விவசாயிகளின் துயர்துடைக்க அரசு ஆவணசெய்யுமா?

அம்பைத்தாலுக்காவுக்குட்பட்ட தெற்கு அரியநாயகிபுரம், சேரன்மகாதேவி பகுதிகளில் நெல் நடவுசெய்து கதிர்வரும் நிலையில் கதிர்களெல்லாம் குருத்துப்பூச்சித் தாக்குதலால் பாதிக்கப்பட்டு 90 சதவீதக் கதிர்கள் வெண்சாவிக்கதிராக வருவதுகண்டு இரத்தக்கண்ணீர் வடிக்கின்றனர்.அரசுவிவசாயிகளின் துயர்துடைக்க ஆவணசெய்யுமா?

நாலடியார் கூறும் நன்னெறி!

பெறுவது கொள்பவர் தோள்மேல் நெறிப்பட்டுக் கற்பவர்க் கெல்லாம் எளியநூல்; – மற்றும் முறிபுரை மேனியர் உள்ளம்போன் றியார்க்கும் அறிதற் கரிய பொருள். 317 பெறத்தக்க பொருள்களைப் பெற்றுக்கொள்கிற பொதுமகளிர் தோள்போல, ஒரு மேற்போக்கான நெறிப்படி கற்போர்க்கு எல்லாம் நூலின் பொதுப் பொருள் எளிதில் விளங்கும். ஆனால் தளிரை ஒத்த மேனியையுடைய அந்தப் பொதுமகளிரின் மனத்தைப் போன்று, நூலின் உள்ளே பொதிந்து கிடக்கும் நுண்பொருள் அறிதற்கு அரிதாம்.

இன்தமிழ் குறளோவியம்!

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின்.குறள்:484 உரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும்.

நாலடியார் கூறும் நன்னெறி!

பாடமே ஓதிப் பயன்தெரிதல் தேற்றாத மூடர் முனிதக்க சொல்லுங்கால், – கேடருஞ்சீர்ச் சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே, மற்றவரை ஈன்றாட்கு இறப்பப் பரிந்து. 316            ஏதோ ஒரு பாடலை மனப்பாடம் செய்து அதன் பொருளை அறிந்து உணராத மூடர்கள் வெறுக்கத்தக்கவற்றைக் கூறும்போது, கேடில்லாத மேன்மையுடைய சான்றோர், அந்த மூடரைப் பெற்ற தாய்க்காக ‘என்னே இவள் செய்த பாவம்!’ என மனம் வருந்தி நாணத்தால் தலை குனிந்து நிற்பர்.

இன்தமிழ் குறளோவியம்!

அருவினை யென்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின்.குறள்:483 செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டா?.

நாலடியார் கூறும் நன்னெறி!

வென்றிப் பொருட்டால் விலங்கொத்து மெய்கொள்ளார் கன்றிக் கறுத்தெழுந்து காய்வாரோடு – ஒன்றி உரைவித் தகம்எழுவார் காண்பவே, கையுள் சுரைவித்துப் போலும்தம் பல். 315 வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே காரணத்தால் விலங்கினை ஒத்து, உண்மைப் பொருளை ஏற்காதவராய் மனம் புழுங்கி, சினம் மிகுந்து பேசுபவரை நெருங்கி, தாமும் தம் சொல்லாற்றலைக் காட்ட முயல்வார். (அவரால் தாக்கித் தகர்க்கப்பட்ட) தம் பல்லினைச் சுரை விதைபோல, தம் கையிலே விழக் காண்பார்.