Monthly Archives: September 2015

நாலடியார் கூறும் நன்னெறி!

ஆகா தெனினும் அகத்துநெய் யுண்டாகின் போகா தெறும்பு புறஞ்சுற்றும்; – யாதும் கொடாஅர் எனினும் உடையாரைப் பற்றி விடாஅர் உலகத் தவர். 337 எறும்புகள், தம்மால் கொள்ள முடியாது எனினும், ஒரு பாத்திரத்தில் நெய் இருக்குமானால், அப்பாத்திரத்தின் மேலே சுற்றிக்கொண்டேயிருக்கும். அதுபோல ஒன்றும் கொடாதவராயினும் பொருள் உள்ளவரைச் சார்ந்த பேதைகள் அவரை விடாமல் சுற்றிக் கொண்டிருப்பார்கள். Advertisements

இன்தமிழ் குறளோவியம்!

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்.குறள்:510 ஆராயாமல் ஒருவரைத் தேர்வு செய்து ஏற்றுக் கொள்வதும், ஆராய்ந்து தேர்வு செய்து ஏற்றுக்கொண்டபின் அவரைக் சந்தேகப்படுவதும் தீராத துன்பத்தைத் தரும்.

உள்ளக்கருத்தை உவகையுடன் சொன்னேன்! ஏற்றிட்டால் களிப்புறும் என்னுள்ளம்!

  அன்பினை ஆத்மார்த்தமாக ஏற்றிடுங்கள்! அரிவாளைத் தூக்கி எறிந்திடுங்கள்! எதிரியாயினும் இன்முகம் காட்டிடுங்கள்! ஏழையாயின் இரங்கி வழிநடத்துங்கள்! கோபம், குரோதம், கொலைவெறி தவிர்த்திடுங்கள்! வாழ்வதோ சிறிது காலம்! வாழ்வினை வாழ்ந்து மகிழ்ந்திடுங்கள்! மானிடப் பிறவி மகத்தானது! நல் மனதோடு மானிடம் காத்திடுங்கள்! அறிவுரை சொல்வது எவராயினும் அது அறவழியதெனில் அன்புடன் ஏற்றிடுங்கள்! குறையெனில் குறுநகையுடன் அதைகளைந்து நிறையுடையோராய் வாழ்ந்து களியுறுங்கள்! வேண்டாம் விபரீத இனவுணர்வு! அனைவரும் சமமென மனவுணர்வோடு நினைவிலிருத்தி நின்று உயர்ந்திடுங்கள்! சமாதானமும் சாந்தியும் நிலைத்திட […]

சுழலவேண்டும் உலகு ஏர்பின்னரே!

இடி,மின்னல்,மழை இன்னும் நோய்,நொடி, நூறு வித தோல்லைகள் தேடி வந்து தாக்கினாலும் ஓடி ஒளியா உழைப்பொன்றே உயிர்மூச்சாய் செயல்படும் விவசாயி செயல்பட மறுத்தால் விதிமுடிந்து வீழும் எந்நாடும்! எச்சரிக்கை இது! எள்ளி நகையாடினால் கொள்ளி வைக்க நாதியின்றி கூண்டோடு அழியும் நிலைவரும்! சுழலவேண்டும் உலகு ஏர்பின்னரே!

நாலடியார் கூறும் நன்னெறி!

தங்கண் மரபில்லார் பின்சென்று தாம்அவரை எங்கண் வணக்குதும் என்பர் – புன்கேண்மை நற்றளிர்ப் புன்னை மலருங் கடற்சேர்ப்ப! கற்கிள்ளிக் கையிழந் தற்று. 336 நல்ல தளிர்கள் நிறைந்த புன்னை மலர்தற்குரிய கடற்கரையையுடைய வேந்தனே! தம்மிடம் விருப்பம் இல்லாதார் பின் சென்று, ‘அவரை எம்மிடம் விருப்பம் உள்ளவராகச் செய்வோம்’ என்று நினைப்பவர் கொள்ளும் அற்பர் உறவு. கல்லைக் கிள்ளிக் கையைப் போக்கிக் கொள்வது போலாம்.

இன்தமிழ் குறளோவியம்!

இன்தமிழ் குறளோவியம்! தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள்.குறள்:509 நன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும். ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பிவிடக் கூடாது.

நாலடியார் கூறும் நன்னெறி!

பெறுவதொன் றின்றியும் பெற்றானே போலக் கறுவுகொண் டேலாதார் மாட்டும் – கறுவினால் கோத்தின்னா கூறி உரைக்கால் பேதைக்கு நாத்தின்னும் நல்ல தினத்து. 335 தான் பெறத்தக்க பயன் ஒன்றும் இல்லாத போதும், ஒரு பயனைப் பெற்றவன் போல், தன்னை எதிர்க்காதவரிடம் பகை கொண்டு சினத்தினால் துன்பம் தரும் சொற்களை அடுக்கடுக்காகக் கூறாவிடின் பேதையின் நாக்கை நல்ல தினவானது தின்றுவிடும்.