மறவாதீர் ஆள்வோரே! இவர்தானே உயிர்மூச்சு! இவருயர வழிகாண்பீர்! இவரழிவைத் தடுத்திடுவீர்!

விவசாயிகள் நிறைந்தது நம்நாடு! ஆனால்
விவசாயிகள் நலன் மறந்திடும் இந்நாடு!
விளைவிப்பவன் விவசாயி! விளைபொருளுக்குத் தக்க
விலை நிர்ணயிப்பவன் வாங்கும் முதலாளி!
விலையோ விளைவிக்கஆன செலவில் பாதி!
விவசாயிகளின் நிலையோ முடிவில் தற்கொலை!
விதியென வாழ்வோரும் ஓடாய் உழைத்து
வீணாய் வாழ்வதைத்தவிர வேறென்ன செய்வது?
வீறுகொண்டெழ விவசாயிகள் என்ன வேங்கைகளா?
சோறு போடும் விவசாயியை இந்நாடு
கூறு போட்டு வாழ்ந்தால் ஒருநாள்
ஏதுமில்லா நிலையில் இந்நாடழியும் நிலைதான்!
ஒன்றுசேரார் விவசாயிகள் என்றெண்ணி ஆள்வோரும்
நன்றுசெய மனமின்றி ஏய்த்திங்கு வாழ்கின்றார்!
ஒட்டுமொத்த விவசாயிகளும் ஒருநாள் ஏரோட்ட
ஒளிந்திட்டால் உயிர்மாளும் இந்நாட்டில்!
மறவாதீர் ஆள்வோரே! இவர்தானே உயிர்மூச்சு!
இவருயர வழிகாண்பீர்! இவரழிவைத் தடுத்திடுவீர்!

Leave a comment