Monthly Archives: October 2015

போகாத இடந்தனிலே போக வேண்டாம். உலகநீதி

உலகம் இனியது! உயிர்களும் இனியது! இவ்வுலகில் நல்லவையும் அல்லவையும் இணைந்தே காணப்படுகின்றன! அல்லவை நீங்க அறம் பெருகும்! நாம் நல்லவை நாடி இனிய செய செல்லக்கூடாத இடங்களைத் தேடிச்செல்வதை தவிர்த்தல் அவசியம்! நல்லதையே நினைப்போம்! நல்லதையே செய்வோம்! நல்லவரோடே பழகுவோம்!நல்லவராகவே வாழ்வோம்! இனிய காலைவணக்கம்!

நாலடியார் கூறும் நன்னெறி!

கல்லாக் கழிப்பர் தலையாயார்; நல்லவை துவ்வாக் கழிப்பர் இடைகள்; கடைகள் இனி துண்ணேம் ஆரப் பெறேமியாம் என்னும் முனிவினாற் கண்பா டிலர். 366 தலையாய அறிவினர் நல்ல நூல்களைக் கற்று வாழ்நாளைப் பயனுடையதாகக் கழிப்பர்; இடைப்பட்டவர்கள் நல்ல பொருள்களை அனுபவித்துக் காலத்தைக் கழிப்பர். கீழ் மக்களோ உண்பதற்கு இனிய உணவு கிடைக்கவில்லையே, செல்வத்தை மிகுதியாகப் பெற முடியவில்லையே என்னும் வெறுப்பினால் தூக்கம் இல்லாது காலமெல்லாம் வருந்திக்கொண்டிருப்பர்.

இன்தமிழ் குறளோவியம்!

! உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளியது உள்ளப் பெறின்.குறள்:540 கொண்ட குறிக்கோளில் ஊக்கத்துடன் இருந்து அதில் வெற்றி காண்பதிலேயே நாட்டமுடையவர்களுக்கு அந்தக் குறிக்கோளை அடைவது எளிதானதாகும்.

வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம். உலகநீதி

தன் உயிரே போவதாயினும் தான் வாழ பிறரைக் கெடுத்தழிக்கின்ற வஞ்சக எண்ணங்கொண்டோரின் கருத்துக்கு இணங்கி நடக்கவேண்டாம்! இனிய காலைவணக்கம் என்னுயிர் உறவோரே!

இன்தமிழ் குறளோவியம்!

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.குறள்:539 மமதையால் பூரித்துப்போய்க் கடமைகளை மறந்திருப்பவர்கள், அப்படி மறந்துபோய் அழிந்து போனவர்களை நினைத்துப் பார்த்துத் திருந்திக் கொள்ள வேண்டும்.

நாலடியார் கூறும் நன்னெறி!

தலையே தவமுயன்று வாழ்தல், ஒருவர்க்கு இடையே இனியார்கண் தங்கல் – கடையே புணராதென்று எண்ணிப் பொருள்நசையால் தம்மை உணரார்பின் சென்று நிலை. 365 (ஒருவருக்கு) தவத்துக்குரிய செயல்களில் முயன்று வாழ்வது தலையாய (சிறந்த) நிலையாகும்; இனிய குணம் பொருந்திய மனைவியுடன் இல்வாழ்க்கையில் ஈடுபடுதல் இடைப்பட்ட நிலையாகும்; கிடைக்காது எனத் தொ¢ந்தும் பொருள் ஆசையால், தமது பெருமையை அறியாதவர்களின் பின்னே போய் நிற்பது கடையாய கீழான நிலையாகும்.

இன்தமிழ் குறளோவியம்!

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.குறள்:538 புகழுக்குரிய கடமைகளைப் போற்றிச் செய்திடல் வேண்டும். அப்படிச் செய்யாமல் புறக்கணிக்கப்பவர்களுக்கு வாழ்க்கையில் உயர்வே இல்லை.