Monthly Archives: November 2015

நாலடியார் கூறும் நன்னெறி!

  ஏமாந்த போழ்தின் இனியார்போன்று இன்னாராய்த் தாமார்ந்தபோதே தகர்க் கோடாம் – மானோக்கின் தம்நெறிப் பெண்டிர் தடமுலை சேராரே, செந்நெறிச் சேர்தும்என் பார்.378 தம்மை நாடி வந்தவர், தம் அழகில் மயங்கியிருக்கும்போது (பொருளைப் பறித்துக்கொண்டு) பின் அவர்கள் வறுமையுற்றதும், ஆட்டுக் கடாவின் வளைந்த முறுக்கேறிய கொம்புபோல் மாறுபடும் குணத்துடன் கூடிய, மான்போலும் பார்வையுடைய பொது மகளிரின் கொங்கைகளை, அறநெறி செல்லும் சான்றோர் விரும்ப மாட்டார்கள். Advertisements

இன்தமிழ் குறளோவியம்!

  கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து.குறள் :551 குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன்.

இன்தமிழ் குறளோவியம்!

இன்தமிழ் குறளோவியம்! கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து.குறள் :551 குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன்.

நாலடியார் கூறும் நன்னெறி!

ஏமாந்த போழ்தின் இனியார்போன்று இன்னாராய்த் தாமார்ந்தபோதே தகர்க் கோடாம் – மானோக்கின் தம்நெறிப் பெண்டிர் தடமுலை சேராரே, செந்நெறிச் சேர்தும்என் பார். 378 தம்மை நாடி வந்தவர், தம் அழகில் மயங்கியிருக்கும்போது (பொருளைப் பறித்துக்கொண்டு) பின் அவர்கள் வறுமையுற்றதும், ஆட்டுக் கடாவின் வளைந்த முறுக்கேறிய கொம்புபோல் மாறுபடும் குணத்துடன் கூடிய, மான்போலும் பார்வையுடைய பொது மகளிரின் கொங்கைகளை, அறநெறி செல்லும் சான்றோர் விரும்ப மாட்டார்கள்.

இன்தமிழ் குறளோவியம்

! கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர்.குறள்:550 கொடியவர்களுக்கு மரண தண்டனை கொடுத்துத் தக்கவரைக் காப்பது, உழவன் களையைக் களைந்து பயிரைக் காப்பதற்குச் சமம்.

வெகுண்டெழு மானிடா! வெகுண்டெழு மானிடா! சாதி வெறிதனை அழித்திட வெகுண்டெழு நீ !

வெகுண்டெழு மானிடா! வெகுண்டெழு மானிடா! சாதி வெறிதனை அழித்திட வெகுண்டெழு நீ ! துணிந்திடு! துடித்திடு! துள்ளியே எழுந்திடு! தீயோர் துச்சமாய் தாழ்த்திடும் போழ்தினிலே! உயர்ந்தோ னென்றும் தாழ்ந்தோ னென்றும் உயிரினில் உதிரத்தால் பேதமில்லை! உணராபேதங் கொண்டிங் கலைந்தால் அவரே இங் கிழிந்தோன் மாற்றமில்லை! கசடறக் கல்லார் இறையே யாயினும் கயவரே இவரென் றெண்ணிநீ யொதுங்கிடுவாய்! எதிலும் இளையோன் நீயில்லை! இவ்வுலகில் எவர்க்கும் எவரும் அடிமையில்லை! சாதிக்கப் பிறந்தவன் நீயென நம்பு! சாதனைகள் படைத்து நீயுயரு! வாழ்த்திடும் […]

மனம்போன போக்கு எல்லாம் போக வேண்டாம்.உலகநீதி

மனம்(உள்ளம்) ஒரு குரங்கு! அதனை மெய்யறிவால் கட்டிணைத்து நல்வழிக்கு உட்படுத்துதல் நலம்பயக்கும். அதனால் உள்ளமானது சென்றவாறெல்லாம் செல்லாதே! இனிய காலைவணக்கம்!