Monthly Archives: January 2016

நாலடியார் கூறும் நன்னெறி!

  கட்கினியாள், காதலன் காதல் வகைபுனைவாள், உட்குடையாள், ஊர்நாண் இயல்பினாள்; – உட்கி இடனறிந்து ஊடி இனிதின் உணரும் மடமொழி மாதராள் பெண். 384 கண்ணுக்கு இனிய அழகினளாய், தன் கணவன் விரும்பும் வகையில் தன்னை அலங்கா¢த்துக்கொள்பவளாய், அச்சம் உடையவளாய், ஊரார் பழிக்கு நாணம் உடையவளாய், கணவனுடன் சமயம் அறிந்து ஊடல் கொண்டு, அவன் மகிழும் வண்ணம் அவ்வூடலிலிருந்து நீங்கி இன்பம் தரும் இனிய மொழி உடையவளே நல்ல பெண் ஆவாள். Advertisements

இன்தமிழ் குறளோவியம்!

இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் உறைகடுகி ஒல்லைக் கெடும்.குறள் :564 நம்மை ஆளுவோர் மிகவும் கொடியவர் என்று குடிமக்களால் சொல்லப்படும் கொடுஞ் சொல்லைப் பெற்ற ஆட்சி அதன் ஆட்சிக் காலம் குறைந்து விரைவி்ல் அழியும்.

இன்தமிழ் குறளோவியம்!

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.குறள்:561 தவறு செய்வோரைக் கண்டு, நடுநிலையில் நின்று ஆய்ந்து, அத்தவற்றை அவர் திரும்பவும் செய்யாமல் இருக்கத் தவற்றுக்கு ஏற்பத் தண்டிப்பதே ஆட்சி

நாலடியார் கூறும் நன்னெறி!

  குடநீர்அட் டுண்ணும் இடுக்கண் பொழுதும் கடல்நீர் அறவுண்ணும் கேளிர் வரினும் கடன்நீர்மை கையாறாக் கொள்ளும் மடமொழி மாதர் மனைமாட்சி யாள். 382 ஒரு குடத்தில் இருக்கும் தண்ணீரையே காய்ச்சிக் குடிக்கத்தக்க வறுமை வந்தாலும், கடல் நீரே வற்றுமாறு பருகத்தக்க அளவு மிகுந்த எண்ணிக்கையில் சுற்றத்தார் வந்தாலும், விருந்தோம்பும் குணத்தை ஒழுக்க நெறியாகக் கொண்டு இனிய மொழி பேசும் பெண், இல்வாழ்க்கைக்குரிய சிறந்த குணம் உடையவள் ஆவாள்.

நாலடியார் கூறும் நன்னெறி!

  அரும்பெற்று கற்பின் அயிராணி யன்ன பெரும்பெயர்ப் பெண்டிர் எனினும் – விரும்பிப் பெறுநசையால் பின்னிற்பார் இன்மையே பேணும் நறுநுதலாள் நன்மைத் துணை. 381   பெறுதற்கு அரிய கற்பினையுடைய இந்திராணியைப் போன்ற புகழ்மிக்க மகளிரேயாயினும் அவர்களுள், தன்னை அடைய வேண்டும் என்னும் ஆசையால் தன் பின்னால் டவர் நிற்காத முறையிலே தன்னைத் காத்துக்கொள்ளும் நல்ல நெறியை உடைய ஒருத்தியே சிறந்த மன¨வி ஆஸ்வாள்.

இன்தமிழ் குறளோவியம்!

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின்.குறள் 560 ஓர் அரசு நாட்டை முறைப்படி காக்கத் தவறினால் ஆக்கப்பணிகள் எதுவும் நடக்காது; முக்கியமான தொழில்களும் தேய்ந்து விடும்.

நாலடியார் கூறும் நன்னெறி!

  உள்ளம் ஒருவன் உழையதா ஒண்ணுதலார் கள்ளத்தால் செய்யும் கருத்தெல்லாம் – தெள்ளி அறிந்த இடத்தும் அறியாராம் பாவம் செறிந்த உடம்பி னவர். 380 ஒளி பொருந்திய நெற்றியுடைய பொதுமகளிரின் மனம் ஒருவனிடத்தே இருக்க, அதனை மறைத்து, தம்மை அடைந்தவரிடம் எல்லாம் சையுடையார் போல் பேசும் போலிச் சொற்களைத் தெளிவாக உணர்ந்தபோதும் பழி நிறைந்த உடம்பை உடைய பாவிகள், அப்பொது மகளிரின் உடம்பை விட்டொழித்தலை அறியார்.