Monthly Archives: February 2016

இன்தமிழ் குறளோவியம்!

  எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில்.குறள்:582 பகைவர், நண்பர், பொதுவானவர் என எல்லாரிடத்திலும் நிகழ்வான எல்லாவற்றையும், எப்போதும் ஒற்றால் விரைந்து அறிந்து கொள்ள வேண்டியது அரசின் வேலை. Advertisements

இனியவை நாற்பது!

  பிச்சை புக்குஆயினும் கற்றல் மிக இனிதே; நல் சபையில் கைக்கொடுத்தல் சாலவும் முன் இனிதே; முத்து ஏர் முறுவலார் சொல் இனிது; ஆங்கு இனிதே, தெற்றவும் மேலாயார்ச் சேர்வு. 1   இனிது – நல்லது சேர்வு – சேர்தல்   பிச்சையெடுத்தாவது கற்பது இனிது. அப்படி கற்ற கல்வி நல்ல சபையில் உதவுவது மிக இனிது. முத்தையொக்கும் மகளிரது வாய்ச்சொல் இனிது. அதுபோல பெரியோர்களைத் துணையாகக் கொள்ளுதல் இனிது.   இனிய காலைவணக்கம்!

இனியவை நாற்பது!

  இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள ‘நாற்பது’ எனமுடியும் பெயர்கொண்ட நான்கு நூல்களில் இரண்டாவதாகும். இதன் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் சேந்தனார் எனப்படுவர். இவர் தந்தையார் மதுரைத் தமிழாசிரியர் பூதன் ஆவார். இவர் வாழ்ந்த நாடு பாண்டி நாடு. இவர் சிவன், திருமால், பிரமன் முதலிய மூவரையும் பாடியிருப்பதால் சர்வ சமய நோக்குடையவராயிருந்திருக்க வேண்டும். இவர் பிரமனைத் துதித்திருப்பதால் கி.பி ஏழாம் நூற்றாண்டுக்குப் பிந்தியவர் என்பதோடு, இன்னா நாற்பதின் பல கருத்துக்களை அப்படியே எடுத்தாளுவதால் […]

இன்தமிழ் குறளோவியம்!

  ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண்.குறள்:581 நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும்.

நாலடியார் கூறும் நன்னெறி!

கண்மூன்று உடையானும், காக்கையும், பையரவும், என்னீன்ற யாயும் பிழைத்ததென் ? — பொன்னீன்ற கோங்கரும்பு அன்ன முலையாய், பொருள்வயின் பாங்கனார் சென்ற நெறி! பொருள்:- பொன் போன்ற தேமல்கள் பொருந்திய கோங்கினது அரும்புகளைப் போன்று விளங்கும் கொங்கைகளை உடைய தோழியே! மூன்று கண்களை உடைய சிவனும், காக்கையும் (சனீஸ்வரனும்), படமுடைய ராகு என்ற பாம்பும், என்னைப் பெற்ற தாயும் எனக்குச் செய்த குட்ட்ரம்தான் என்ன? ஒன்றும் இல்லை. குற்றமெல்லாம், என் தலைவர், பொருள் மீது உண்டான ஆசையினால் […]

இன்தமிழ் குறளோவியம்!

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்.குறள்:580 எல்லாராலும் விரும்பத்தக்க நாகரிகத்தை விரும்புபவர், தமக்கு நெருக்கமானவர் நஞ்சையே தருகிறார் என அறிந்தும் கண்ணோட்டம் காரணமாக அதை உண்டு அவருடன் பழகுவர்.

நாலடியார் கூறும் நன்னெறி!

  முலைக்கண்ணும் முத்தும் முழுமெய்யும் புல்லும் இலக்கணம் யாதும் அறியேன் – கலைக்கணம் வேங்கை வெரூஉம் நெறிசெலிய போலும்என் பூம்பாவை செய்த குறி. 399 முலைக்காம்புகளும் முத்துமாலையும் உடல் முழுதும் அழுந்தும்படி தழுவிக்கொண்டதன் காரணத்தை அப்போது யான் அறியேன்! தாமரைப் பூவில் உறையும் திருமகள் போன்ற என் மகள், மான் கூட்டங்கள் புலிக்கு அஞ்சும் பாலை வழியில் என்னை விட்டுப் பிரிந்து தன் காதலனுடன் செல்வதற்குத் தான் அப்படி அன்பாகத் தழுவிக் கொண்டாளோ? (தலைவனுடன் போன தன் […]