நட்பில் உண்டே சாதனைகள்! நம்பி
நன் னட்பினையே நீ தேடிடுவாய்!
காத்திடுவான் உயிர்த் தோழனவன்! எக்
காலத்திலும் உன்துணை யாகிடுவான்!
வடக்கிருத்தல் எனும் நிலைதனில் மன்னன்
கோப்பெருஞ்சோழன் தன்னருகில் இதுவரை காணா
இவனுயிர் நண்பர் பிசிராந்தைக்ககோர் இடமொதுக்கி
நம்பியே தாமிருந்தார்; நண்பரும் வந்திருந்து
இன்னுயிர் நீத்து சாதணையில் இடம்பிடித்தார்!
அரிதில் தாம்பெற்ற நெல்லிக் கனியதை
தானுண்ணாது தவிர்த்து தமிழ் மூதாட்டி
ஔவைக் களித்து, அருஞ்செயல் புரிந்து
நட்பிற்கு சாதணைப் படைத்திட்டான் அதிகமான்!
கூடா நட்பெனினும் நட்புக்காய் தன்
நண்பனவன் பக்கம்நின்று நற்போர் நடத்தி
செஞ்சோற்றுக் கடன் தீர்த்த கர்ணனின்
நட்பில் உண்டே சாதணைகள்!
இன்னும் பற்பல சாதனைகள் ஆயிரம்
நன் னட்பதால் நாம் பெறலாம்!
நம்பி வழி நடப்போம்! அகிலத்தில்
நல் நண்பர் தன் துணையோடு!
Advertisements