வறுமை! (சிறுகதை)

 

கொடிது! கொடிது! வறுமை கொடிது! ஆம் வறுமையை அனுபவித்தவர்க்கே அதன் கொடுமைப் புரியும்.12 வயதுப் பாலகன் அவன். தந்தை இருக்கும்வரை வறுமையின் நிழல் அண்டாது வளர்ந்தவன்.திடீரென அவன் தந்தை இறந்தவுடன் தாயுடன் தனித்து விடப்படுகிறான். காலைப் புலர்ந்தால் யார் யாரோ வீடு
தேடி வந்து அவன் அன்னையைக் கடிவதும், அன்னை மறுமொழி
தயவுடன் கூறுவதும் அவன் கண்ணைக் கலங்கச் செய்கிறது.
எப்படியம்மா இக்கடனை நீ தனியாக அடைக்கப்போகிறாய்? நான் இனி பள்ளி செல்லப்போவதில்லை.நான் வேலைக்குச் சென்று இக்
கடனையெல்லாம் அடைத்துவிடுவேன். நீ ஒன்றும் கவலைப்படவேண்டாம்.கண்ணீருடன் அன்னையைக் கட்டிப்பிடித்து
அழுகிறான் பாலகன். கலங்காதே என் கண்ணே! அம்மா உன்னை இச்சிறுவயதில் பணிக்குச் செல்ல அனுமதியேன். நாளையே என்னிடமிருக்கும் ஒன்றிரண்டு நகைகளை விற்று,கடன்கொடுத்தோரில் அவசரப்படுவோருக்கெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் கொடுத்து மீதியுள்ளோருக்கு
உழைத்துக் கடனையெல்லாம் அடைப்பேன். நீ கண்டிப்பாகப் பள்ளி செல்லவேண்டும். நன்கு படிக்க வேண்டும். படித்து நல்ல பணியில் சேர்ந்து இந்த தாய்க்குப் பெருமை சேர்க்க வேண்டும். இந்த தாயின் சொல்லைக் கேட்பாயல்லவா? தாயின் கெஞ்சல் மகனை மேலும் கண்கலங்கச்செய்தது. அத்துடன் நாளை வறுமை இலாது வாழ நான் இன்று நன்கு படிக்க வேண்டும் என்ற உறுதியை அவனுக்குத்
தந்தது. வறுமை தந்த உந்துதல் அவனை நன்கு படித்திடச்
செய்தது. எத்தனையோ நாட்கள் தாயும் மகனும் பசியோடிருந்தாலும், வறுமையிலும் செம்மையாக, பிறரிடம் தங்கள் வறுமை தெரியாவண்ணம் வாழ்ந்து வந்தனர்! பிச்சைப் புகினும் கற்றல் நன்றாயினும் இடர் வந்தபோதும் எவரிடமும் கையேந்தாது தங்கள் உழைப்பினில் உறுதியாய் நின்றனர் தாயும்மகனும்!
வறுமை கண்டு அஞ்சாது உழைப்பினை பாலமாக்கி தன்மகனின்
கல்விக்கு கடிந்துழைத்ததால் வறுமை அத்தாயிடம் அஞ்சி
ஓடியே விட்டது! இன்று அப்பிள்ளை கல்வியில் நன்கு தேர்வுபெற்று அரசு பணிதனில் அமர்ந்து தன்தாயினை கண்ணுங் கருத்துமாய் காத்து வருவதைக் காண்போர் கொடுத்து வைத்தவள் இத்தாய் என்று பெருமையோடு பேசிக்கொள்கின்றனர்!
முதுமைப் பருவம் எய்திய தாய் இதுகேட்டு பூரித்துதான் போகிறாள்! வறுமை கொடிதுதான்! அதற்காக நொடிந்து மடிந்திடாமல் அதனைத் தன் உழைப்பதானால் வென்றிட்ட தாய்
இவர் போன்றோர் எண்ணற்றோர் இன்றும் இன்பமாய் வாழ்கிறார்கள் இவ்வுலகில்!
வறுமையே கொடியோன்தான் நீ! அதற்காக
வருந்திக் குலைந்திட மாட்டேன்!
எதிர்த்திடுவேன் என்னுழைப்பதனால் உன்னை! அப்பொழுது
என்னிடம் பயந்து ஓடி ஒளிந்துகொள்வாய்!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: