கௌரவம்(சிறுகதை)

 

ஒரே இனம்; ஒரே மதம்; தூரத்து உறவும் கூட! எண்ணியே வேலன், வள்ளி இருவரும் விரும்பியே காதலித்தனர். தங்கள் அன்பை, இலைமறைவு காயென வளர்த்தும் வந்தனர்.உண்மை இருவீட்டாருக்கும் தெரிய வருகிறது.பெண்தந்தால் தன் பையனுக்கு மணம் முடித்துவிடலாம் எனவெண்ணி, வேலன் வீட்டார் பெண் கேட்டுச் சென்றளர்.பெண்வீட்டார் வசதியானவர். ஏழை இவனுக்கா பெண்ணைக் கொடுப்பது எனக் கௌரவம் பார்த்துப் பெண் கேட்ட வேலன் பெற்றோரைத் திட்டி அனுப்பி விடுகின்றனர். தங்கள் பெண்ணை எப்படியோ மனம்மாற்றி, பெண்ணின் சொந்த அத்தை மகனுக்கு மணம்முடித்திடத் திட்டமிடுகின்றனர்.அத்தைமகனோ, வள்ளி வேலனை விரும்புவது அறிந்து மறுக்கிறான்.மனம் இல்லாத அவனை மிரட்டி வள்ளியை அவனுக்கு ஆடம்பரமாகத் திருமணத்தை நடத்தி வைக்கின்றனர்.வளமில்லா மண்ணில் பயிர் செழித்து வளருமா? மனமில்லா மணவாழ்க்கையும் வளம்பெறுமா?.பெற்றோர்கள் எவ்வளவோ முயன்றும் தம்பதிகள் உறவாய் இணைந்திட மறுத்தனர். வள்ளி, தன் முன்னாள் காதலன் தன் கண்முன்னே எவ்வித உறுத்தலுமின்றி நடமாடுவதை எண்ணிக் கண் கலங்குகிறாள் ஒருநாள் யாருமறியாமல் இரவில்
வேலன் வீடுசென்று கதவினைத் தட்டுகிறாள். வீட்டில் அவன் மட்டுமே இருந்தான். திடுக்கிட்டு கதவினைத் திறந்த வேலன், வள்ளி நிற்பதைக் கண்டதும் அச்சமுறுகிறான். எதற்காக இரவினில் வந்து கதவைத் தட்டுகிறாய் எனக் கேட்ட வேலனின் கையைப் பிடித்துக் கதறி அழுகிறாள் வள்ளி.வேலனிடம் வா! நாம் எங்காவது ஓடிப்போய் வாழலாம் என கெஞ்சுகிறாள் வள்ளி. வேலன் எவ்வளவோ மறுத்தும் விடுவதாய் இல்லை வள்ளி.ஆண்மகன்தானே வேலன்! அவனும் இசைந்து புறப்பட ஆயத்தமாகும் வேளை, வள்ளி வீட்டாருக்கு விபரந் தெரியவருகிறது. இருவீட்டாருக்கும் வெட்டு குத்தென நிலைமை மோசமாகிவிடுகிறது. காவல்நிலையத்தில் வழக்கும் பதிவாகிறது.
மாப்பிள்ளை முறைப் பையனாயினும் இனிமேலும் வள்ளியுடன் சேர்ந்து வாழுதல் இயலாது என எண்ணி இருவீட்டாரும் சமாதானமாகப் பேசி ஒருமுடிவுக்கு வந்தனர். வள்ளிக்கு வெளியூரில் வேறு ஒரு பையனைப் பார்த்து திருமணம் முடித்துவிட எண்ணினர்.
அவசர அவசரமாக நகரத்தில் ஒரு பையனைத் தேடி, வள்ளிக்கு மறுமணம் செய்து வைத்தனர். ஆனால் அப்பையனோ அற்ப ஆயுளில் இறந்துவிட்டான். வள்ளியின் அத்தைமகனுக்கும் திருமணம் நடந்து விட்டது. ஒரு ஆண் குழந்தையுடன்
ஆனந்தமாக வாழ்ந்து வருகிறான். வள்ளியின் முன்னாள் காதலன் வேலனுக்கும் திருமணமாகி இருபெண் குழந்தைகளுடன் இன்பமாக வாழ்ந்து வருகிறான். வள்ளியோ! இன்று இளம்விதவை! கௌரவம் பாராது தன்பெண்ணை அவள் காதலித்தவனுக்கே திருமணம் செய்து கொடுத்திருந்தால் அவள் வாழ்வு நலமாக இருந்திருக்குமென ஏங்கித் தவக்கின்றனர் வள்ளியின் பெற்றோர்! கௌரவம் தன் மகளின் வாழ்க்கையையே சிதைத்துவிட்டதே! எணணித் தவிக்கின்றனர் பெண்ணின் பெற்றோர்கள்!

இதுவும் பெண்ணின் வாழ்வு சிதைந்திட
இழைத்திட்டக் கௌரவக் கொலைதானே?
சிந்திப்பீர் பெற்றோரே! இருமனம் இணைந்திட்டால்
எந்தவொரு கௌரவமும் பாராது அவர்களை
இணைத்திடுவீர்! வாழ்வுற வழி வகுத்திடுவீர்!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: