‎ஏனோ‬ என் மனம் ஏங்குதே! இங்கு வாழ்ந்தது போதுமென தோன்றுதே!

‎ஏனோ‬ என் மனம் ஏங்குதே!
இங்கு வாழ்ந்தது போதுமென தோன்றுதே!
கூனிக் குருகி, வாடி வதங்கி,
நாடி தளர்ந்து, நரம்பு புடைத்து
இன்னும் எதற்கு வாழ்ந்திட வேண்டுமென
‎ஏனோ‬ என் மனம் ஏங்குதே!
இங்கு வாழ்ந்தது போதுமென தோன்றுதே!

முதுமை துன்பம் கொடிது! கொடிது!
தனிமை துன்பம் அதனின் கொடிது!
எவர்க்கும் உதவா வாழ்விது வாழ்வா?
புவிக்குப் பாரமாய் வாழ்வது வீணே!
‎ஏனோ‬ என் மனம் ஏங்குதே!
இங்கு வாழ்ந்தது போதுமென தோன்றுதே!

மகனோ அருகில் இல்லை!இல்லை!
மடிந்தால் அழுதிட யாரும் இல்லை!
உறவும் இல்லை! பகையும் இல்லை!
உயிரோரிடிருப்பதில் ஒரு பயனும் இல்லை!
‎ஏனோ‬ என் மனம் ஏங்குதே!
இங்கு வாழ்ந்தது போதுமென தோன்றுதே!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: