பெருமை! “சிறுகதை”

பாலா மும்பையில் வசித்து வருகிறார். தன் மனைவி ஒரே மகனுடன் சொந்த ஊரான தூததுக்குடிக்கு வந்து தன் பெற்றோர்களுடன் சிறிதுகாலம் தங்குகிறார். அந்நாட்களில் அங்காங்கே வாழ்ந்துவரும் தங்கள் உறவினர் வீடுகளுக்கும் சென்று
வருகின்றனர். எவ்வீட்டுக்குச் சென்றாலும் தாராளமாகப் பண்டம்
பழங்கள் வாங்கிச் செல்லத் தவறுவதே இல்லை. செல்லும் வீடுகளில் எவர் வீட்டிலும் கை நனைப்பது இல்லை. மாறாக தங்கள் பெருமையினைக் காட்டுவதற்காக 500 ,1000 ரூபாய் நோட்டுகளை அசால்டாக எடுத்துக்கொடுப்பார்கள். மகனை ஆங்கிலவழி சேர்ப்பதற்காக 50000 நன்கொடை அளித்தோம் எனத்
தம்பட்டம் அடித்துக் கொள்ளவும் தவறுவது இல்லை. உறவை ஒருபோதும் மதித்ததில்லை. மாற்றாக வசதியானவர்களை நாடி ஓடி உபசரிக்கவும் தவறியதில்லை.தங்கள் மகன் 3 வயதான நிலையில் அவன் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக விலை
என்னவென்று பாராது புத்தகங்களை வாங்கிக் குவித்ததுடன் நில்லாமல் அதனைப் பிறரிடம் காட்டிப் பெருமைப் பட்டுக்கொண்டனர். பணத்தைப் பணமென்று பாராது கார், தனிவீடு
ஆடம்பரப்பொருள் வாங்குதல் எனத் தண்ணீராய்ச் செலவளித்தனர்.
இவர்களின் பெற்றோரும் இவர்களின் செல்வச் செழிப்பினில் பெருமை கொண்டனர்.
காலங்கள் வேகமாக உருண்டோடின.மகன் பள்ளி இறுதித் தேர்வில் சொற்ப மதிப்பெண்களோடேயேத் தேறியிருந்தான். பணம்கொடுத்தே விரும்பிய பாடப்பிரிவைப் பெற முடிந்தது.
கல்லூரியில் சேரவும் இதே நிலையே!

எவ்வளவுதான் உருண்டாலும் உடலில் ஒட்டிடும் மண்ணே ஒட்டிடும்.படிப்பும் அவரவர் அறிவுத்திறனுக் கேற்பவே மதிப்பெண்களைப் பெற்றுத் தரும். கவலை இல்லாது வளர்ந்த பிள்ளை கல்வியில் தேறாவிட்டாலும் உடலாலும், ஊதாறியாகத்
திரிவதிலும் உன்னத நிலையில் இருந்தான்.தம்மில் தம்மகன்
அறிவுடையோன் எனச்சொல்லிப் பெருமைப்பட முடியாத நிலையில் இன்று தலைகுனிந்து வாழ்கின்றனர் அப்பெற்றோர்.
பெருமைக்காக வீண்செலவு செய்து இருந்த கொஞ்ச நஞ்ச சொத்துக்களையும் விற்றாகிவிட்டது.
மகனோ காதலித்தப் பெண்ணை திருமணம் செய்துகொண்டு
அமெரிக்காவில் வேலை பார்க்கும் அவன் மனைவியுடன் வாழ்ந்து வருகிறான். பெருமை பேசித் திரிந்த பெற்றோரோ இன்று கையறு
நிலையில் கவலையுடன் காலத்தைத் தள்ளுகின்றனர்.
வீண் பெருமை பேசி செலவுசெய்து
பின்னால் விதியை நொந்து வாழாதீர்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: