Monthly Archives: May 2016

இன்னா நாற்பது!

நெடு மரம் நீள் கோட்டு உயர் பாய்தல் இன்னா; கடுஞ் சின வேழத்து எதிர் சேறல் இன்னா; ஒடுங்கி அரவு உறையும் இல் இன்னா; இன்னா, கடும் புலி வாழும் அதர். 30 சேறல் – செல்லுதல் அரவு – பாம்பு அதர் – வழி நெடிய மரத்தின் உச்சிக் கிளையிலிருந்து கீழே குதித்தல் துன்பமாம். மிக்க கோபத்தினையுடைய யானையின் எதிரே செல்லுதல் துன்பமாம். பாம்பு புற்றில் கை வைத்தல் துன்பமாம். கொடிய புலிகள் வாழும் வழியில் […]

இன்தமிழ் குறளோவியம்!

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் கழிநல் குரவே தலை.குறள் :657 பழியை மேற்கொண்டு இழிதொழில் செய்து பெறும் செல்வத்தை விடச் சான்றோர் வினைத்தூய்மையோடிருந்து பெறும் பொல்லாத வறுமையே சிறந்தது.

நல்வழி நடத்தும் தேவதையே!

நல்வழி நடத்தும் தேவதையே! அன்னைக்குப் பின்பு என் அன்னையாய் வற்றா அன்பினை அள்ளிக் கொடுத்த என் இல்லத்தரசியே இனியவளே நீவாழி! கடிந்துனை உரைத்த போதும் கலங்கிடாது என் துணைநின்றாய்! துறந்திட்டாய் உன் சுகமெலாம்! தூயவளே நீ வாழி! அதிகாலை துயிலெழுந்து பணிமுடித்து அக்கரையுடன் எனை எழுப்பி காலைக் கடனெல்லாம் முடித்து கடமையாற்ற எனைவழி நடத்தி வேலை முடிந்து திரும்புகையில் விழிவழிமேல் வைத்திருந்து வரவேற்று புன்னகை முகங் காட்டி பூரித்து உளம் மகிழ்ந்து களைப்புடன் வந்த எந்தன் அலுப்பினைத் […]

இன்னா நாற்பது!

குறி அறியான் மா நாகம் ஆட்டுவித்தல் இன்னா; தறி அறியான் கீழ் நீர்ப் பாய்ந்தாடுதல் இன்னா; அறிவு அறியா மக்கள் பெறல் இன்னா; இன்னா, செறிவு இலான் கேட்ட மறை. 29 மாநாகம் – பெரிய பாம்பு பாம்பினை அடக்கத் தெரியாதவன் பெரிய பாம்பினை ஆடச் செய்தல் துன்பமாம். உள்ளிருக்கும் ஆழத்தை அறியாமல் நீரில் பாய்ந்து விளையாடுதல் துன்பமாம். அறிய வேண்டுவனவற்றை அறியமாட்டாத பிள்ளைகளைப் பெறுதல் துன்பமாம். அடக்கமில்லாதவன் கேட்ட இனிய உரை துன்பமாம்.

இன்தமிழ் குறளோவியம்!

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை.குறள்:656 பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்றச் செயல்களைச் செய்யக்கூடாது.

காதல் அழிவதில்லை! நற் காதலர்களுக்கு மட்டுமேயது!

காதல் அழிவதில்லை! நற் காதலர்களுக்கு மட்டுமேயது! காதலியுங்கள் மனம் ஒருமித்து! முடிவெடுங்கள் பெற்றோர் உளமறிந்து! வாழ்க்கை அன்பில் பிணைந்தது! அன்னை, தந்தை அன்பினில் நீந்திக் களித்திட்ட நாம் மாற்றொருவரை அன்பால் இணைத்திட நம் நலம் நாடும் பெற்றோரைத் தவிர்த்திடல் தவறில்லையா? உண்மைக் காதல் ஒருபோதும் தடம் பிறழா! சிந்திப்போம் நம் காதல் எள்ளளவும் பெற்றோரை இழிவுறுத்தாதென்று நம்பி முடிவெடுங்கள்! நல்லொழுக்க நெறிநின்று! காதலர்களே! காதலர்களே! உணர்வின் காமமெல்லாம் காதலல்ல! உண்மை அன்போடு உளமொன்றி காதலிப்போர் ஒருபோதும் தவறிழையார்! […]

ஏற்றிடுவோம் சபதமினி ஒழுக்கமுடன் நாம்திகழ!

தேர்தல் முடிந்தது! ஓட்டால் நம் தேர்வும் முடிந்தது! நாளை தோற்பது யார்? வெல்வது யார்? காத்திருப்போம் முடிவிற்காய்! வெல்பவர் மக்களுக்காய் தொண்டாற்றுவாரா? சொல்லும் நிலையில் நாமில்லை! கோடியைக் கொட்டி, கூசாது பொய்யுரைத்து வாக்கினைப் பெற்றிட வழியெங்கும் கைகுவித்து ஓட்டுக்கு விலைகொடுத்து தூங்காது கண்விழித்துப் பெற்றிடும் வெற்றி மக்களுக்குத் தொண்டாற்றவா? நம்பிதான் வாக்களிப்போம்! வென்றிட்டால் விதைத்திட்டப் பணத்திற்கு பதின்மடங்காய் எடுத்திட்டப் பின்புதானே ஏதோ எச்சிலாய் மிஞ்சிட்ட இலையைத்தான் எறிவாரே ! மகிழ்ந்தே நாம் ஏற்றிடுவோம்! ஓட்டுக்கு காசுஏந்தும் ஒழுக்கமில்லா […]