”
உன் நினைவுகள் போதுமடி எனக்கு! வேறு
என் சுகம் எனக்கிங் கெதற்கு?
புன்னகையில் உன் முகம் மின்னுவதை நான்
எண்ணுகையில் பெறுவேனடி கோடி ஆனந்தம்!(உன்)
சிட்டுக் குருவி போல சுற்றித் திரிந்ததை மனம்
விட்டுப் பிரிந்திடுமோ சொல் நீ!
எட்டுக் கடல் தாண்டி நீ எங்கிருந்தாலும்
என் நினைவு மறந்திடுமோ உன்னை! (உன்)
ஒற்றை மலர் தலை சூடி உன்
ஒடியும் இடையும் கவி பாடி
மெல்ல நடந்து வரும் அழகை
என்னுள்ளம் நினைந்தே களிகொள்ளும். (உன்)
Advertisements