கண்ணோடு கண்கலந்து
கருத்தால் உளமொருமித்து
வாழ்க்கைப் படகினில்
வலம்வர ஒருவருக்கொருவர்
துணை நிற்போமென
எண்ணிப் பிறப்பதல்ல காதல்!
உள்ளக் கிளர்ச்சி
மெல்ல எழுகையிலே
சொல்ல முடியாத
இன்ப உணர்வுகளின்
ஏக்கத்தில் பிறப்பதே
காதல் இன்று!
அன்பென சொல்லிடுவர்
ஒற்றை வார்த்தையில்!
தாயிடம் பிள்ளையின் அன்பு
உயர்வான நற்காதல்!
சேயிடம் தாய்கொள்ளும் அன்பு
தெய்வீகக் காதலது!
உயிர்களிடம் அன்பு காட்டல்
உன்னத காதலன்றோ!
வாடிய பயிர் கண்டு
வாடிய வள்ளலாரின் அன்பும்
வானுயர்ந்த காதல்தானே?
காதல் இல்லா உலகமேது?
காதல் செய்வோம் உலகுமீது!
சாதல் நம்மை நெருங்கிடுமுன்
காதல் கொள்வோம் மானிடத்தை!
Advertisements