இன்பம்! இன்பம்! இங்கு
யாவும் இன்பம்!
உலகு இன்பம்! உலவும்
உயிர்கள் இன்பம்!
கடலும், மலையும், உலவும்
நிலவும், ஓடும் நதியும்,
சுழலும் புவியும், எரியும்
தணலும், ஏகிடும் முகிலும்,
மலரும் பூவும், மது
உண்ணும் வண்டும்,
ஆடும் மயிலும், பாடும் குயிலும்,
ஓடும் நதியும், உயர்தோங்கி
வளரும் மரமும், செடிகொடியும்
கோடை வெயிலும், கொட்டும் மழையும்,
ஓடைப் புணலும்,வாடைக் காற்றும்,
விலங்கு, பறவை, ஊர்வன,நிற்பனவென
யாவும் காணுந்தோறும் இன்பம்! இன்பம்!
எல்லாம் இன்பமயம்!
Advertisements