Monthly Archives: August 2016

கார்நாற்பது!

திருந்திழாய் காதலர் தீர்குவ ரல்லர் குருந்தின் குவியிண ருள்ளுறை யாகத் திருந்தி னிளிவண்டு பாட விருந்தும்பி இன்குழ லூதும் பொழுது.15 திருந்திய அணிகளையுடையாய்! குருந்த மரத்தின் குவிந்த பூக்களின் உள்ளிடமே தமக்கு உறைவிடமாக இருந்து ,திருந்திய இனிய இளியென்னும் பண்ணை வண்டுகள் பாட, கரிய தும்பிகள் இனிய குழலை ஊதாநிற்கும் இக்காலத்தில் நம் தலைவர் நீங்கியிருப்பார் அல்லர். Advertisements

இன்தமிழ் குறளோவியம்!

தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாந் தூது. குறள்:685 சினத்தைத் தூண்டாமல் மகிழத்தக்க அளவுக்குச் செய்திகளைத் தொகுத்தும், தேவையற்ற செய்திகளை ஒதுக்கியும், நல்ல பயனளிக்கும் விதமாகச் சொல்லுவதே சிறந்த தூதருக்கு அழகாகும்.

இன்தமிழ் குறளோவியம்!

அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு.குறள்:684 தூது உரைக்கும் செயலை மேற்கொள்பவர் அறிவு, தோற்றப் பொலிவு, ஆய்ந்து தெளிந்த கல்வி ஆகிய மூன்றும் நிறைந்தவராக இருத்தல் வேண்டும்.

கார்நாற்பது!

செல்வந் தரவேண்டிச் சென்றநங் காதலர் வல்லே வருத றெளிந்தாம் வயங்கிழாய் முல்லை யிலங்கெயி றீன நறுந்தண்கார் மெல்ல வினிய நகும்.14 விளங்காநின்ற அணிகளையுடையாய், முல்லைக்கொடிகள் விளங்குகின்ற ,மகளிரின் பற்களைப் போல அரும்பு ஈனும்வகை. நல்ல குளிர்ந்த மேகம் ,மெல்ல இனியவாக மின்னா நின்றன (ஆதலால்) பொருள் தேடிக் கொள்ள சென்ற நமது தலைவர் விரைந்து வருதலை தெளிய அறிந்ததாம்.

நான் கவிபுணைவேன் நெஞ்சம் நினைந்துருக!

பூட்டிய இதயத்துள் பூமலரே தாள் திறவாய்! தீட்டியே வைரமதாய் சிறந்தொளிர்வாய் நன்னெஞ்சே! ஏட்டினில் இல்லா கவிபடைக்க இன்பொருள் எனக் கூட்டி வரிபடைப்பாய்! ஆடிடும் தூளியாய் என் அகமமர்ந்து ஆனந்த நீச்சலில் நீ குளிப்பாய்! காவியம் பிறப்பதும், காதலர் களிப்பதும் அழகு ஓவிய மாவதும் உன்னிடமே! ஆதலின் நெஞ்சே அன்புருவுன் தாளினைத் திறவாய் தமிழ்க் கவிபடைக்க! நான் கவிபுணைவேன் நெஞ்சம் நினைந்துருக!

உலகம் ஒருநாள் ஒட்டுமொத்தமாய் அழியும் இது திண்ணம்!

காதலா? காமமா? இவளுக்கு! யாரும் உணரமுடியா அலங்கோலப் பிறவி இவள்! கன்னிப் பருவமதில் மையல் கொண்டாள் ஆடவ னொருவனை! அங்கீகாரம் பெற்றோரிடம் கிட்டாததால் அவன் நினைவகற்றி ஏற்றிட்டாள் மணவாளாய் எழிலான ஒருவனை! ஓடியது சிலகாலம் அவளுக்கு ஓய்விலா தின்பத்தால்! முத்தான குழந்தைகள் மூன்று பெற்றதால் உற்றாள் பேரின்பம்! தாம்பத்யம் சலித்ததோ? மணாளன் தரும் சுகம் குறைந்ததோ? தேடினாள் தாம்பத்ய உறவிற்கு திறன்மிகு இளைஞ னொருவனை! சில காலம் மகிழ்ந்திருக்க சீயென ஒதுக்கினாள் அவனையுமே! விடலை யொருவன் கிடைத்திட […]

கார்நாற்பது!

ஏந்தெழி லல்குலா யேமார்ந்த காதலர் கூந்தல் வனப்பிற் பெயறாழ – வேந்தர் களிநெறி வாளரவம் போலக்கண் வௌவி ஒளிறுபு மின்னு மழை.13 பருவமிகு அழகினையுடையாய்…தம் தலைவரொடு கூடி இன்பந் துய்த்த மகளிரின் சரிந்த கூந்தலினிது அழகுபோல மழை பெய்ய அரசர் யானையை வெட்டி வீழ்த்துகின்ற ஒலியினையுடைய வாளினைப்போல கண்களைக் கவர்ந்து ஒளிவிட்டு மின்னா நின்றது..