Monthly Archives: September 2016

கார்நாற்பது!

கார்நாற்பது! சிரல்வாய் வனப்பின வாகி நிரலொப்ப ஈர்ந்தண் தளவந் தகைந்தன – சீர்த்தக்க செல்வ மழைமதர்க்கட் சின்மொழிப் பேதையூர் நல்விருந் தாக நமக்கு.36 குளிர்ச்சிமிக்க செம்முல்லைப் பூக்கள் மீன் குத்திக் குருவியின் வாய் போலும் அழகுடையவனாகி வரிசை பொருந்த அரும்பின.(ஆதலினால் இப்போது)செல்வத்தையுடைய மழைபோல குளிர்ந்த மதர்த்த கண்களையும் சிலவாகிய மொழியினையுமுடைய காதலியது ஊரானது நமக்கு நல்ல விருந்தாகுமிடமாகட்டும் Advertisements

இன்தமிழ் குறளோவியம்!

இன்தமிழ் குறளோவியம்! செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை உள்ளறிவான் உள்ளம் கொளல். குறள்:677 ஒரு செயலில் ஈ.டுபடுகிறவன், அச்செயல் குறித்து முழுமையாக உணர்ந்தவனின் கருத்தினை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

உழைத்துப்பாரு வாழ்வு மலரும்

துன்பமில்லா உயிர்கள் ஏது தோழா? சிறு தோல்விக்காக அழுகிறாயே தோழா!வந்த துன்பம் எல்லாம் இன்பமாகும் ஒருநாள் அந்த எண்ணத்தோடு உழைத்துப்பாரு வாழ்வு மலரும்.

கார்நாற்பது!

சென்றநங் காதலர் சேணிகந்தா ரென்றெண்ணி ஒன்றிய நோயோ டிடும்பை பலகூர வென்றி முரசி னிரங்கி யெழில்வானம் நின்று மிரங்கு மிவட்கு.35 விதியினால் பிரிந்து சென்ற தலைவன் நெடுந்தூரத்தைக் கடந்து சென்றாரென நினைத்து பசலை நோயுடனே , பலதுன்பங்களும் மிகப் பெறுதலால் இவள் பொருட்டு எழுச்சியினையுடைய மேகம் வெற்றியை அறிவிக்கும் முரசின் ஒலியைப்போல வானில் இருந்தும் இரங்கா நிற்கும்.

இன்தமிழ் குறளோவியம்!

இன்தமிழ் குறளோவியம்! முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் படுபயனும் பார்த்துச் செயல்.குறள்:676 ஈடுபடக்கூடிய ஒரு செயலால் எதிர்பார்க்கப்படும் பயன், அதற்கான முயற்சிக்கு இடையே வரும் தடைகள், அச்செயலாற்றுதவற்கான முறை ஆகிய அனைத்தையும் முதலில் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.

முயன்றால் முடியாதா? முயலுவோம்! முன்னேறுவோம்!

கதையும் பாடலும்! மழலைப்பாடல்)( லிவினும் தன்யஸ்ரீயும் மாண்டிசோரிப் பள்ளியில் ஒன்றாகப் படிக்கிறார்கள். லிவின் மான் 1. தன்யஸ்ரீ மான் 2 . இருவரும் ஒன்றாகவே பள்ளிசெல்வார்கள். அவர்கள் பள்ளியில் பாடப்புத்தகச்சுமை, வீட்டுப்பாட நெருக்கடி என்று எதுவும் கிடையாது. மாணாக்கர்கள் அவர்கள் வயதுக்கேற்ப தகுந்த உபகரணம் மூலம் தானே கற்றுக்கொள்கிறார்கள். ஆசிரியர்கள் அவர்களை உன்னிப்பாகக் கவனிப்பதுடன் தெரியாத குழந்தைக்கு நல்வழிகாட்டவும் செய்கிறார்கள். அதனால் கற்றலில் புரிதல் எளிதாகிறது.வகுப்பறை மாணாக்கர்களுக்கு விளையாட்டுக்கூடமாகி மகழ்ச்சியைஅள்ளித் தருகிறது.அறிவியல் சம்பந்தமான செய்திகளை விளையாட்டாகவே எளிதில் […]

கார்நாற்பது!

கார்நாற்பது! விரிதிரை வெள்ளம் வெறுப்பப் பருகிப் பெருவிறல் வானம் பெருவரை சேருங் கருவணி காலங் குறித்தார் திருவணிந்த ஒண்ணுதல் மாதர் திறத்து.34 மிக்க பெருமையையுடைய மேகம் விரித்த அலையையுடைய கடலினிது நீரை நிறைய உண்டு பெரிய மலையை அடையா நிற்கும்.மழை சூழ்ந்து கொள்ளும் கார் காலத்தை தெய்வ உத்தியென்னும் தலைக்கோலத்தை(ஒருவித தலையணி) அணிந்த ஒள்ளிய நெற்றியையுடைய காதலியினிடத்து (தான் மீண்டும் வரும் காலமாக) தலைவன் குறிப்பிட்டான்.