Monthly Archives: October 2016

உள்ளத்திற் கஃதே உயர்வு!

இரப்போர்க்கு ஈந்து, இன்சொல் பேசி, துறந்தோர்க்கும் துயர் நிறைந்தோர்க்கும்- நல் துணையாய் நின் றுதவுதல் என்றும் உள்ளத்திற்  கஃதே உயர்வு! Advertisements

உன் னுயிரோடு உயிராகி ஒன்றாகுவேன்!

காதல் கவிதை! என் காதலி நீயென் தேவதை! என் நெஞ்சில் குடியிருக்கும் செந்தாமரை! செந் தேனடி உன்னைத் தின்பேனடி! எந்தன் கண்போ லுனைக்காத்துக் கொள்வேனடி! நான் சூரியன்! நீ சந்திரன்! என் னொளிகொண்டு புவிதன்னை நீயாளுவாய்! பௌர்ணமியே என் பக்கத்தில் வா! பெறுவோமே சுகம் நாமும் தினந்தோறுமே! அழகோவியம் நீ அறிவாலயம்! என்றும் அசைந்தாடும் தென்றலாய் சுக மூட்டுவாய்! உன் தோளிலே நான் சாய்வேனடி! உன் னுயிரோடு உயிராகி ஒன்றாகுவேன்!

களவழி நாற்பது!

பல் கணை எவ் வாயும் பாய்தலின் செல்கலாது ஒல்கி, உயங்கும் களிறு எல்லாம், தொல் சிறப்பின் செவ்வல் அம் குன்றம்போல் தோன்றும் – புனல் நாடன் தெவ்வரை அட்ட களத்து.10 சோழன் பகைவர்களை வென்ற களத்தில், உடல் முழுமையும் அம்புகள் பாய்ந்து இரத்தத்தைப் போர்வையாக்கிக் கொண்டு மேலே தொடர முடியாமல் அசையாமல் உள்ள காட்சி, தொன்று தொட்டே செம்மை நிறம் படிந்து வரும் சிறப்பினைப் பெற்ற செம்மலை போல் தோன்றும்

இன்தமிழ் குறளோவியம்!

மன்னர் விழைப விழையாமை மன்னரால் மன்னிய ஆக்கந் தரும்.குறள்:692 மன்னர் விரும்புகின்றவைகளைத் தமக்கு வேண்டுமெனத் தாமும் விரும்பாமலிருத்தால் அவர்க்கு அந்த மன்னர் வாயிலாக நிலையான ஆக்கத்தை அளிக்கும்.

காதல் கவிதை!

அழகி நீயென் காதலி! இந்த அகிலம் உந்தன் காலடி! நிலவும் நாணும் பெண்ணடி என் நெஞ்சில் தழுவி கொஞ்சடி! கார்மேக முன் கூந்தலோ? தென்றல் காற்று முந்தன் ஏவலோ? புவி போற்றும் கவிகள் யாவரும் உன் புகழைப் பாடும் தூதரோ? மலரும் மயங்கி நின்றதே! உன் மதி வதனம் கண்டதால்! இனி புலரும் எந்தன் வாழ்க்கையும் என் நிலவுப் பெண்ணே உன்னதால்!

கவிபாடி எனைத் தாலாட்ட இங்கு வருவாயே நீ ஓடோடி!

காதல் கவிதை! விழிகொண்டு கதை பேசிடும் விண்ணரசியே என் காதலி! தமிழ்க் கவிபாடி எனைத் தாலாட்ட இங்கு வருவாயே நீ ஓடோடி! நில வொளிபோன்ற முகமானவள்! நினைவினில் தீஞ் சுவையானவள்! உலகிங்கு உனக்கானதே! உலவிடும் உயிர் என்றும் உனதானதே! வருவாயே  நீ ஓடோடி! சுகம் தருவாயே தினம் எனைநாடி! மகிழ்வோம் நாம் எந்நாளுமே சுகம் பெறுவோம் புவிமீதுதான்! விழிகொண்டு கதை பேசிடும் விண்ணரசியே என் காதலி! தமிழ்க் கவிபாடி எனைத் தாலாட்ட இங்கு வருவாயே நீ ஓடோடி! […]

வந்து அமர்வாயா என் உயிரோடு?

காதல் கவிதை! தமயந்தி நளன் அழைக்கின்றேன்! வருவாயா? சுகம் தருவாயா? தூது விடுகின்றேன் நான்! அன்னத் தினையே தான்! வருவாயா தமயந்தி நீ! தருவாயா சுகமே வாநீ! சனி யுன்னைத் தொடர்ந்தாலும் இனி என்னை வருத்தாது உன்னோடு நான் இருந்தாலே ஒரு தீங்கும் நேராது காத்திடுவேன் என் உயிராக! காலனையும் கடிந் தெதிர்த்திடுவேன்! வருவாயே தமயந்தி! என் உயிராக என்னுள் உறைவாயே! தூக்கம் தொலைந்து வெகு நாளாச்சு! உயிர்த் துடிப்போ உன் பெயர் சொலலாச்சு! கண்ணுக்குள் ஒளிந்து […]