Monthly Archives: November 2016

களவழிநாற்பது!

ஓடா மறவர் உருத்து, மதம் செருக்கி, பீடுடை வாளர் பிணங்கிய ஞாட்பினுள், கேடகத்தோடு அற்ற தடக் கை கொண்டு ஓடி, இகலன் வாய்த் துற்றிய தோற்றம், அயலார்க்குக் கண்ணாடி காண்பாரின் தோன்றும் – புனல் நாடன் நண்ணாரை அட்ட களத்து.28 சோழன் பகைவர்களை வென்ற களத்தில், பெருமிதத்தோடு போரிட்ட போர்க்களத்தில் வீரர்கள் பகைவர்தம் கைகளை ஏந்திய கேடயத்தோடு அறுபட்டு வீழுமாறு வெட்டினர். அக்கைகளை நரிகள் கவ்விக் கொண்டு ஓடின. அந்தத் தோற்றம் தம் முகங்களைக் கண்ணாடியில் கண்டு […]

இன்தமிழ் குறளோவியம்!

அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர்.குறள்:711 ஒவ்வொரு சொல்லின் தன்மையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள்.

களவழிநாற்பது!

செஞ் சேற்றுள் செல் யானை சீறி மிதித்தலால், ஒண் செங் குருதி தொகுபு ஈண்டி நின்றவை, பூ நீர் வியல் மிடாப் போன்ற – புனல் நாடன் மேவாரை அட்ட களத்து.27 சோழ மன்னன் தன்னை அடையாதவர்களை (பகைவர்களை) வென்ற களத்தில், இரத்தச் சேற்றில் முன்னும் பின்னுமாக நடந்து யானைகள் கோபத்தினால் மிதித்தலால் உண்டான குழிகளில் வீரர்களின் சிவந்த கண்களோடு புதிய இரத்தமானது திரண்டு தேங்கியது. அது சிவந்த மலர்களைக் கொண்ட நீரினைக் கொண்ட அகன்ற சால்களைப் […]

இன்தமிழ் குறளோவியம்!

நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால் கண்ணல்லது இல்லை பிற.குறள்:710 யாம் நுட்பமான அறிவுடையேம் என்று பிறர் கருத்தை அறிபவரின் அளக்குங்கோல், ஆராய்ந்து பார்த்தால் அவனுடையக் கண்களே அல்லாமல் வேறு இல்லை.

 #சிறகுகள்_சிறைபடுமோ?

#சிறகுகள்_சிறைபடுமோ? அன்பெனும் வானத்தில் ஆனந்தமாய் நீந்துவோரை ஆழ் சிறையில் அடைத்து வதைத்தாலும் அன்பின் சிறகுகள் சிறை(அகப்} படுமோ அஞ்ஞான முடையோர்க்கு! எத்தனைத் துன்பங்கள் இடைவந்து மறித்தாலும் அத்தனையையும் தூளாக்கும் அன்பின் சிறகுகளால் ஆழ் கடலென்ன ஆகாயத்தையும் நீந்திடலாம்! அன்பிலா நெஞ்செலாம் வலிந்தழிக்கும் நஞ்சாகும்! அன்புடை மாந்தரோ அரசாளும் இறையாகும்! அகிலம் அழிந்தாலும் ஆழ்துயில் கொண்டாலும் அழிவிலாத அன்பின் சிறகுகள் சிறைபடுமோ?

களவழிநாற்பது!

எவ் வாயும் ஓடி, வயவர் துணித்திட்ட கை வாயில் கொண்டு எழுந்த செஞ் செவிப் புன் சேவல் ஐ வாய் வய நாகம் கவ்வி விசும்பு இவரும் செவ் வாய் உவணத்தின் தோன்றும் – புனல் நாடன் தெவ்வாரை அட்ட களத்து.26 சோழ வீரர்கள் போரில் எதிரிகளின் கைகளைத் துண்டாக்கிக் கீழே விழச் செய்தனர். சிவந்த காதுகளை உடைய ஆண் கழுகுகள் அவற்றைத் தூக்கிக் கொண்டு வானில் பறந்தன. அக்காட்சி பாம்பினை வாயில் தூக்கிச் சென்ற கருடன் […]

இன்தமிழ் குறளோவியம்!

பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின்.குறள்:709 பார்வையின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளக் கூடியவர்கள், ஒருவரின் கண்களைப் பார்த்தே அவர் மனத்தில் இருப்பது நட்பா, பகையா என்பதைக் கூறிவிடுவார். அன்பின் கண்களாலே அனைவரையும் பார்த்தே அகமகிழ வாழ்வோம் என்னாளுமே. இனிய காலைவணக்கம் தோழர்களே!