Monthly Archives: December 2016

இன்தமிழ் குறளோவியம்!

  கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும் நல்லா ரவையஞ்சு வார்.குறள்:729 ஆன்றோர் நிறைந்த அவையில் பேசுவதற்கு அஞ்சுகின்றவர்கள், எத்தனை நூல்களைக் கற்றிருந்த போதிலும், அவர்கள் கல்லாதவர்களாவிட இழிவானவர்களாகவே கருதப்படுவார்கள்.

இன்தமிழ் குறளோவியம்!

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள் நன்கு செலச்சொல்லா தார்.குறள்:728 நல்லனவற்றை நல்லவர் கூடிய அவையில் அவர் மனங் கொள்ளச் சொல்லத் தெரியாதவர், பலதுறை நூல்களைக் கற்றிருந்தாலும் உலகிற்குப் பயன்படாதவரே.

அப்பல்லோ செல்லுங்கடா அடக்கி விடுவார்கள் உங்களை!

ஒட்டுமொத்த பெருச்சாளிகள் ஒன்றில்லாமல் அழியும்வரை ஒருசொட்டும் மழையாய் ஒருபோதும் வீழமாட்டேன் வருணன் சபதமாம்! பாவிகளே மாறுங்கடா ஆவி அடங்குமுன்னே! இல்லை அப்பல்லோ செல்லுங்கடா அடக்கி விடுவார்கள் உங்களை!

விடாது கர்மவினை விரட்டியே கொன்றிடும்!

நீதியையும் நேர்மையையும் நிலைகுலையச் செய்திட்டு நிமிர்ந்து திரிந்திடுவோர் வருந்தி வாயடைத்து மனம் நொறுங்கி மர்மமாய் மடிந்திடுவர்! விடாது கர்மவினை விரட்டியே கொன்றிடும்!

விடாது வருத்தியழிக்கும் அடாது செய்திட்ட அநியாய பாவமெலாம்!

பாவம் செய்தவர்கள் பரலோகப் பிதாவைப் பாடி வழிபட்டாலும் காவி உடையணிந்து கரணமிட்டுப் புரண்டாலும் யாவும் துறந்தவரென சன்னியாசம் வாங்கினாலும் விடாது வருத்தியழிக்கும் அடாது செய்திட்ட அநியாய பாவமெலாம்!

அச்சம் உச்சம்பெற வாழ்த்திடுவோம் ஊழல் பெருச்சாளிகளை!

தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் மீதான வருமான அதிகாரிகளின் அதிரடி சோதனைக்குப் பிறகு தமிழக அரசியல் பிரமுகர்களின் இல்லத்தில் மௌனம் கலந்த கலக்கம் தாண்டவமாடுகிறது தங்கள் இல்லங்களும் சோதனைக்குள்ளாகலாமோ என்ற அச்சத்தில்! அச்சம் உச்சம்பெற வாழ்த்திடுவோம் ஊழல் பெருச்சாளிகளை!

எழுந்திடு தமிழனாய்! நான் ஏற்பேன் உனைத் தோழனாய்! தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா? நிலை குலைந்ததே இன்று நேரிய நெஞ்சிலாதோர் செயலதுவால்! இன்று தன் வாழ்க்கைக்கும் வசதிக்கும் தன்மானம் இழந்து நண்டு நரி யென்று கண்டு கொள்ளாமல் கிஞ்சித்தேனும் வெட்கம் சிறிதின்றி வீழ்பவன் தமிழன் என்றால் வியக்காதோ இவ்வுலகு! தன்மானத் தமிழன் தலைவணங்கான் விண்ணே காலடியில் வீழ்ந்திட்டபோதும்! எழுந்திடு தமிழனாய்! நான் ஏற்பேன் உனைத் தோழனாய்!