Monthly Archives: January 2017

இன்தமிழ் குறளோவியம்!

இன்தமிழ் குறளோவியம்! அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல்.குறள்:755 அருளோடும், அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தின் ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத் தீமையானது என்று நீக்கிவிட வேண்டும்.

மதுவினால் மது அருந்தியர் மட்டுமல்ல மற்றையோரும் துன்புறுகின்றனர் தினந்தினம்! என்று மாறும் இந்நிலை?

பேருந்தில் வந்து கொண்டிருந்தேன் சற்றுப் பெரிதான சத்தத்துடன் வண்டி நின்றது! எட்டிப் பார்த்தேன் வெளியினில் நடந்தறிய! இருசக்கர வண்டியின் அடியினில் நசுங்கிக்கிடந்தது! ஓட்டியவர் பேருந்தின் பின்னால் கிடந்தார் ஓட்டுநர்,நடத்துநர் பதற்றத்தில் இருந்தனர் ஒவ்வொருவரும் தம்தம் கருத்தை வெளிப்படுத்தினர்! 108க்குத் தகவல் தெரிவிக்க வந்தது வண்டி விரைந்தங்கு!மூச்சு மட்டும் இயங்க பேச்சின்றி பெரிய காயத்துடன் கிடந்தவரை கூடிநின்றவர்கள் தூக்கி வண்டியில் ஏற்ற விரைந்தது வண்டி மருத்துவமனைக்கு! விபத்துக்கான காரணம் மது அருந்தி வண்டி ஓட்டியதே என்றனர்! மதுவினால் மது […]

வேண்டாம் என்று சொல்வதெல்லாம் வெறும் நடிப்பே புரிந்து கொள்வீர்!

கல்யாணம் என்றாலே கதறியவன் சொன்னான் எனது கல்யாணம் இவ்வளவு வயது தள்ளிப் போனதற்குக் காரணம் எனது பெற்றோர்களேயென! பெற்றோர்களுக்குத் தெரியவேண்டாமா காலாகாலத்தில் தன் பிள்ளைகளுக்குக் கல்யாணம் செய்துவைக்க வேண்டுமென்று! சிந்திப்பீர் பெற்றோர்களே! வேண்டாம் என்று சொல்வதெல்லாம் வெறும் நடிப்பே புரிந்து கொள்வீர்!

இப்பொழுது நிம்மதி இரு பெற்றோர்களுக்கே!

இரு மதத்தைச் சேர்ந்த இரு பாலினர் மனம் ஒருமித்து காதலித்தனர்! பெண்ணிடம் கேட்டேன் பிள்ளையின் உறவினராய்! எங்கள் குடும்பத்தில் உன்னை உறவாக்கிக் கொள்ள தடையில்லை! உன்வீட்டில் உனை இங்கு உறவாக்க சம்மதிப்பார்களா? சிந்திப்பாய் சீர்தூக்கி என்றேன்! சில மாதங்கள் தொடர்ந்த காதலில் முறிவு! பிரிந்து விட்டனர் எதுவும் பேசாது! இப்பொழுது நிம்மதி இரு பெற்றோர்களுக்கே!

இன்தமிழ் குறளோவியம்!

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று.குறள்:753 பொருள் என்று சொல்லப்படுகின்ற நந்தா விளக்கு, நினைத்த இடத்திற்குச் சென்று உள்ள இடையூற்றைக் கெடுக்கும்.

இன்தமிழ் குறளோவியம்!

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு.குறள்:752 பொருள் இல்லாதவரை (வேறு நன்மை உடையவராக இருந்தாலும்) எல்லாரும் இகழ்வார், செல்வரை (வேறு நன்மை இல்லாவிட்டாலும்) எல்லாரும் சிறப்பு செய்வர்.

தனியனாய் உணர்கிறேன்! தவித்தே அழுகிறேன் மாறாதோ இவ்வுலகென!

மதம் எனக்கில்லை; ஆனால் நல் மனம் எனக்குண்டு! இனம் எனக்கில்லை; ஆனால் உணர்வால் இணைதல் எண்ணமுண்டு! சாதி எனக்கில்லை; ஆனால் தமிழ் சார்ந்திடும் குணமுண்டு! நண்பர்கள் பல்லோருண்டு; ஆனால் என் எண்ணத்தோடிணைபவர் எவருமில்லை! சிந்திக்கிறேன்! தினந்தினம் தேடியலைகிறேன்! முடிவினில் உலகத்தோடு ஒன்றிணைகிறேன்! பேதங்கள் நீங்கிட பிரார்த்திக்க இங்கு பேதமில்லா இறையில்லை! இன மத பேதமில்லா எவரும் இங்கு தென்படவில்லை! தனியனாய் உணர்கிறேன்! தவித்தே அழுகிறேன் மாறாதோ இவ்வுலகென!