Monthly Archives: February 2017

இன்தமிழ் குறளோவியம்!

இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே பிழைத்தது ஒறுக்கிற் பவர்.குறள்:779 சபதம் செய்தவாறு களத்தில் சாவதற்குத் துணிந்த வீரனை யாராவது இழித்துப் பேச முடியுமா? முடியாது.

இன்தமிழ் குறளோவியம்!

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன் செறினும்சீர் குன்றல் இலர்.குறள்:778 போர்வந்தால் உயிரின் பொருட்டு அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர், தமது அரசன் அது வேண்டாமென்று சினந்தாலும் அவ்வீரமிகுதியால் குன்றார்.

இன்தமிழ் குறளோவியம்!

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் கழல்யாப்புக் காரிகை நீர்த்து.குறள்:777 பரந்து நிற்க்கும் புகழை விரும்பி, உயிர்வாழ்வையும் விரும்பாத வீரர், வீரக் கழலை காலில் கட்டிக்கொள்ளுதல் அழகு செய்யும் தன்மையுடையதாகும்.

இன்தமிழ் குறளோவியம்!

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்தன் நாளை எடுத்து.குறள்:776 ஒரு வீரன் தன் கடந்த நாள்களை எண்ணி எடுத்து, அவற்றுள் முகத்திலும் மார்பிலும் போரின்போது புண்படாத நாள்களைப் பயனில்லாமல் கழிந்த நாள்களாகக் கருதுவான்

காதலியின் வருகைக்காக காத்திருக்கும் காதலன் காதலியின் வருகை தாமதமானதால் காதலின் வேகத்தால் தவித்து கனிந்துருகிப் பாடுகிறான்!

காதலியின் வருகைக்காக காத்திருக்கும் காதலன் காதலியின் வருகை தாமதமானதால் காதலின் வேகத்தால் தவித்து கனிந்துருகிப் பாடுகிறான்! தனிமையில் தவிக்கிறேன் அன்பே தவிப்பினை நிறுத்திட வா! இனிமையின் இன்னுருவே ஏனடி இன்னும் தாமதம்? ஒளியென உனை நினைத்தேன் ஒளிந்திடல் முறை தானோ? கனியென உனை எடுத்தேன் களிப்புற மறுக்கலாமோ? எனக்கென நீபிறந்தாய்! என் எண்ண மெலாம் கலந்தாய்! எட்டியே நீநின்றால் எனை எள்ளுதல் போலில்லையோ? போடி பைத்தியமே! நான் பொல்லா மனிதனில்லை! வாடி அருகினிலே! உன்னைக் கூடி மகிழ்ந்திடுவேன்! […]

வட்ட நிலவுக்குச் சூடிடவே எட்டுது குதிக்குது என்மனதே!

எண்ணப் பறவை சிறகடித்து என்னுள் பறக்கிறதே! மின்மினிபோல் கண்தனைச் சிமிட்டி என்னுள்ளம் களிக்கிறதே! நிலவினை எட்டிப் பிடிக்கிறதே வலம்வந்து உலகினைச் சுற்றிடுதே கடலலை மேலேறிக் களிக்கிறதே காவியம் பாடிடத் துடிக்கிறதே! மேகத்தில் ஏறியே நீல வானினைக் கீறியே உள்ளே எதுவும் உண்டோ என்றெண்ணி எட்டிப் பார்க்கிறதே! நட்சத்திரங்களைப் பூவாக்கி தங்க நார்கொண்டு மாலையாய்க் கோர்த்தெடுத்து வட்ட நிலவுக்குச் சூடிடவே எட்டுது குதிக்குது என்மனதே!

முத்து முத்து சிரிப்பழகா முல்லைப் பூ பல்லழகா கட்டு உடல் மேனழகா காந்த விழி நோக்கழகா சிங்கம் போல் நடையழகா சிங்காரப் பேச்சில் அழகா குங்குமுகப் பொட்டு அழகா கொண்டிருக்கும் அன்பு அழகா வீரத்தின் உரு அழகா வெல்லுந் திறன் மிடுக்கழகா உதயம்போல் ஒளி அழகா உண்மை பேசும் வழியழகா அழகெல்லாம் உன் உருவில் அமைந்ததனால் என் கண்ணே மொத்தத்தில் நீயெனக்கு என் சித்தத்தி்ல் பேரழகு! ஆராரோ ஆரிரரோ என் ஆருயிரே ஆராரோ இப் பாராளும் பாலகனே […]