Monthly Archives: March 2017

இன்தமிழ் குறளோவியம்!

பழகிய நட்பெவன் செய்யும் கெழுதகைமை செய்தாங்கு அமையாக் கடை.குறள்:803 நண்பர் நட்பின் உரிமையால் செய்யும் செயலைத் தாம் செய்தது போலவேக் கருதி உடன்படாவிட்டால் அவரோடு தாம் பழகிய நட்பு என்ன பயன் தரும்? Advertisements

பாதை மாறிய பண்பாடு!

பாதை மாறிய பண்பாடு போதை யானதே நெஞ்சோடு! வாழ்வை மாற்றுதே அடியோடு வளரும் நாகரீக உருவோடு! ஐயையோ இதிவென்ன அலங்கோலம்! அங்கங்கள் வெளிப்படும் புதுக்கோலம்! குத்துதே! குழப்புதே மனதினை! கொணரும் இக்கோலம் அழிவினை! பாரதப் பண்பாடு பரிசுத்தம்! இதுதரும் நமக்கு மனசுத்தம்! வாழ்ந்திடு இதனோடு நீநித்தம்! வாழ்த்திடும் உனையே நம்சுற்றம்! கற்பு நிலையினில் மாறாதே! கண்டோருடன் கூடித் தெரியாதே! பெரியோருக்கு நீ தலைவணங்கு! பெற்றோர் சொல்லுக்கு நீயிணங்கு! ஒருவனுக்கு ஒருத்தி ஒழுக்கநெறி! உறவினை மதித்தல் உயர்வுநெறி! அறவழி […]

அனைவரும் சமமே அணைத்திடு அன்பால் அகிலமே வாழ்த்திடும் உன்னை!

கற்றவர் மனதினில் தொற்றிடும் பேதங்கள் காலத்தின் கோலங்கள் தானே! எத்தனைப் படித்தும் இனபேதங் கொண்டால் இங்குநீ இழிந்தோன் தானே! முகத்திரை தன்னைக் கிழித்திடு நீயும் முறையில்லை சாதீய பேதம்! அனைவரும் ஒன்றென அறிந்திட்ட நீயும் அறிவிலியோ நெஞ்சைக் கேளு! பிறப்பினில் எவரும் இழிந்தவர் இல்லை பேசிடு உன்குரல் ஓங்க! அனைவரும் சமமே அணைத்திடு அன்பால் அகிலமே வாழ்த்திடும் உன்னை!

தா!தா!! உன்னருளை!!!

புழுக்கம் இன்று புகைகிறது மனது! வாராயோ மழையே! வரவேற்கிறேன் அன்பாய்! கொஞ்சமே பெய்தாய் குளிர்ந்ததே நெஞ்சம்! வஞ்சனை ஏனோ! வா!வா! இன்றும்! ஒட்டிய உதட்டிற்கு ஒத்தடம் போலும் சற்று நீபெய்தாய் சரியில்ல இதுவே! கொஞ்சம் பெரிதாய் கொட்டிடு மழையே! நெஞ்சம் மகிழும் பஞ்சம் அகலும்! கொண்டுவா காற்றே கோடை மழையினை! குளிரட்டும் புவியும் தளிரட்டும் பயிரும்! வாவாவா மழையே! வரவேற்கிறேன் உனையே! தடதடவென இடிமுழங்கிட தரணியில் பெய்திடுவாய்! பளீர் பளீரென மின்னும் ஒளியுடன் விண்ணைக் கலக்கிடுவாய்! பெருமழை […]

நல்லவற்றை ஒப்பிடச் செய்வதே நட்பாகும்!

நண்பன் கூறிடும் அனைத்துக் கூற்றினையும் அப்படியே ஏற்றுக்கொள்ளுதல் மடமையாகும். ஒவ்வாக் கருத்தெனின் எடுத்துரைத்து நல்லவற்றை ஒப்பிடச் செய்வதே நட்பாகும்!

தனக்குப் பிடிக்கிறதே எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் எனநினைப்பது தான்தோன்றித் தனமானதே!

இன்தமிழ் குறளோவியம்!

நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு உப்பாதல் சான்றோர் கடன்.குறள்:802 நட்பிற்கு உறுப்பாவது நண்பனுடைய உரிமைச் செயலாகும். அந்த உரிமைச் செயலுக்கு உடன்பட்டவராதல் சான்றோரின் கடமையாகும்.