காலச் சுவடுகள்!

காலச் சுவடுகள் கரைந்துதான் போனது!
எண்ணிப் பார்க்கிறேன் என்னென்னவோ மாற்றங்கள்!
பிஞ்சி வயதினில் தாயினை அன்புடன்
கொஞ்சி மகிழ்ந்ததும் இரவானால் தாயின்பின்
அஞ்சி ஒளிந்ததும் அம்மம்மா மறக்கக்கூடுமோ?
பள்ளிப் பருவமதில் துள்ளிக் குதித்து
கால் நடையாய்க் கல்வி கற்க
கடுகி சென்றதை எண்ணிப் பார்க்கிறேன்!
கட்டாந் தரையினில் உருண்டு பிரண்டு
கபடி ஆடியதை நினைத்து மகிழ்கிறேன்!
மார்கழிப் பனியில் மகிழ்ந்து நீராடலும்
ஆடிக் காற்றிலோடி பட்டம் விட்டலும்
பனைமரந்தேடி பணம் பழம் பொறுக்க
விடி காலையிலேயே விழுந்தெழுந் தோடலும்
ஆற்று வெள்ளந் தனில் அயராது
அக்கரையை நீந்தித் தாண்டலும் நல்
சித்திரையில் மணமணக்க நெல் வறுத்து
உரலில் அவல் குற்றி எடுத்தலும்
கோயில் விழாக்களுக்குக் வண்டியில்
கூண்டுக் கட்டிக் கூடிப் போதலும்
கதிர் அறுத்துக் கட்டுக் கட்டி
களம் சேர்த்து போரடித்துப் பொலிகுவித்து
மரக்கால் கொண்டு நெல்லளந்து கோணி
மூட்டைதனை காளை வண்டியேற்றி வீடு
கொண்டு சேர்த்த நிகழ்வெல்லாம் இன்று
காலச் சவடுகளாய்க் கண்முன்னே தெரிகிறதே!
நிலவொளியில் இரவுதனில் முற்றத்தில் பயமின்றி
கயிறு கட்டிலினிலே களித்தே துயிலலும்
இக்காலம் நிகழுமா எண்ணியே வியக்கிறேன்!
எல்லாம் மாறியதே! இனி ஏட்டினிலே
எழுதினாலும் விந்தையென எண்ணி இங்கு
வியந்திடுவர் மக்களெல்லாம்! இன்று நான்
காலச் சுவடுகள் கரைத்ததை மனக்
கண்களால் கண்டு களிக்கின்றேன்!

நி.மு:369

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: