முத்திரை நீங்கிட உன் முகத்திரையை நீ நீக்கு! எத்திரையைப் போட்டாலும் இழி முத்திரை உனக்கிருக்க நீ இமயம் தொட்டாலும் இவ்வுலகம் இழிந்து தானே பார்க்கிறது! சமத்துவம் நீ பெற சாடி உடை தடைகளை! மனிதனென மாண்புயர நீ மாற்றியமை புது விதிகளை! உயர்ந்தோன் நான்! என் உழைப்பால் உயர்வேன் நான்! இழிதரும் சலுகைகளை இனி எட்டி உதைத்திடு! அனைவரையும் சமநிலையெனக் கருதா அசிங்கத்தை வெறுத்திடு! சமரிட நீ தயாராகு! சரி சமமாக்கிட ஒன்றுகூடு! நரிக்கூட்டம் ஊளையிடத்தான் செய்யும்! […]

முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா வஞ்சரை அஞ்சப் படும்.குறள்:824 முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்பு கொள்வதற்கு அஞ்ச வேண்டும்

பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் ஆகுதல் மாணார்க் கரிது.குறள்:823 பல நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்த போதிலும், அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராகப் பழகுதல், (உள்ளன்பினால்) மாட்சியடையாதவர்க்கு இல்லை.

ஓட்டளித்து தேர்ந்தெடுக்கப்போர் ஊழலால் ஓரங்கட்டப்பட்டு ஒதுங்கி நிற்க காவலுக்கு உரிமைபெற்ற கடமைதவறா நண்பர்களோ உச்சிவெயிலென்று பாராது குச்சிகொண்டு இருசக்கர நான்கு சக்கரவண்டிகளைத் தடுத்து நிறுத்தி குற்றங்குறை உள்ளதோ இல்லையோ குறைவிலாது பணம் தினம் கறக்கின்றனர்! செத்தபின்பு சேர்த்துவைத்தப் பணமெதுவும் சேர்ந்து இவரோடுபோவாது எனத்தெரிந்தும் அலைகிறார்களே இவர்கள் அற்ப பணத்திற்காக! சட்டத்தின் காவலர்களே சத்தியத்திற்குக் கட்டுப்படுங்கள்! மீறினால் மீளாத்துயரில் மூழ்குவீர்கள்! எச்சரிக்கையல்லவிது! ஏழைகளிடும் சாபம்!

திருடர்கள் இரண்டுபட்டால் திருட்டெல்லாம் இவரின் திட்டுதலாலே தினந் தினம் வெளிப்படும்! கொட்டுங்கள் திருடர்களே திருடியதைக் கொஞ்சம் கொஞ்சமாய்! மன்னிக்காது உங்களை இத்தேசம்!

ஊஞ்சலில் ஆடினான் லிவின் உற்சாகமாக! உரக்கவே கத்தினான் அவன் எக்காளமாக! தன்னிலை மறந்தான் அவன் தலைக்கனமாக! தடுமாறி வீழ்ந்தான் அவன் தவறினிற்காக!

ஒண்டவந்த பிடாரி ஒட்டுண்ணியாகி உயிரை உறிஞ்சிக் குடித்தது! கண்டுகளித்த பிடாரிக்கூட்டம் கனவுலகத்தில் மிதந்தது! ஆட்சிக் கட்டில் நமக்கென எண்ணி ஆனந்தக் கூத்தாடியது! முன்செய்த பாவத்தீர்ப்பு பின்தள்ளி சிறையிலடைக்க என் செய்வதென ஏதேதோ விந்தைகள் செய்து பார்க்குது! பிடாரிகள் இடும் எலும்புத் துண்டுக்கேங்கி பின்னாலொரு கூட்டம் அலையுது! சமபங்கு தனக்குவேண்டுமென சண்டைபோடுது ஒருகூட்டம்! கயமை கண்டும் கண்டுகொள்ளாது கவனித்துப் பார்க்குது ஒருகூட்டம்! பாவச்செயல்கள் தொடர்கிறது! பாவத்தின் சம்பளம் மரணமென அறிந்தும் திருந்தா தலையுது திருட்டுக் கூட்டம்! இனியும் தவறினை […]