Monthly Archives: September 2014

பிச்சைக்காரர்கள் நீங்கள்!

கோயிலுக்கோ அல்லது குடும்பத்தோடு உலா செல்லவோ எங்கு சென்றாலும் எண்ணற்ற கைகள் பொருள் ஏற்றிட நீளுகின்றன நம்மை நோக்கி பரிதாப தோற்றமாய்! இயல்வது கரவேல் என நினைத்து எத்தனை பேருக்கு இடலாம் பிச்சை! இலவசங்களை அள்ளி வீசிடும் அரசுகள் இதற்கோர் முடிவு எப்பொழுது காண்பார்கள்? இல்லை சொல்லாமல் சொல்லு கிறார்களோ இலவசங்களைப் பெறும் நீங்களும் பிச்சைக்காரர்களென!

ஊழலே உலகாச்சு!

ஊழலே உலகாச்சு! உண்மை உறங்கி நாளாச்சு! உள்ளதை சொல்பரை உற்ற நண்பரும் வெறுத்தாச்சு! காசுதான் கடவுளென கயவரைத் தொழுதல் கடனாச்சு! ஏனிங்கு வீண்பேச்சு! எடுத்தெறியும் எலும்புக்கு ஏங்கிடும் நாயினைப்போல் வாழ்ந்திடும் வாழ்க்கை சுகமாச்சு! காசுக்காக கழுத்தறுக்கும் காமத்துக்காய் உயிர்குடிக்கும் சாதிவெறியினால் சமத்துவம் சீரழிக்கும் பாவிகளாய் மாறிடும் நாட்டினிலே தீயவை வேரறுக்கும் நிலைதான் தோன்றிடுமோ? தோன்றினால் அதனையும் விலைகொண்டு வாங்கிடாரோ? இங்கு பாவிகள்!

நாலடியார் தரும் நன்னெறி!

விளக்குப் புகஇருள் மாய்ந்தாங்கு ஒருவன் தவத்தின்முன் நில்லாதாம் பாவம் – விளக்குநெய் தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை தீர்விடத்து நிற்குமாம் தீது. 51 விளக்கொளி வர, அங்கே இருந்த இருள் அகல்வது போல, ஒருவன் செய்த தவத்தின் முன்னே பாவம் விலகும், விளக்கில் எண்ணெய் குறையும்போது, இருள் பரவுவது போல் நல்வினை நீங்குமிடத்துப் பாவம் நிலைத்து நிற்கும்

60.அறநெறிச்சாரம்-அவ்விநயம் ஆறாவன!

அச்சமே ஆசை உலகிதம் அன்புடைமை மிக்கபா சண்டமே தீத்தெய்வ-மெச்சி வணங்குத லவ்விநயம் என்பவே மாண்ட குணங்களிற் குன்றா தவர். மாட்சிமைப்பட்ட குணங்களில் குறையாத நிறையுடைய பெரியோர்கள் அச்சமும்,ஆசையும்,லௌகிகமும்,அன்புடைமையும், இழிவு மிக்க புறச்சமயமும்,கொடுந்தெய்வத்தைத் துதித்து வணங்குதலும்,விநயமல்லாததென்று சொல்லுவர்.

இன்தமிழ் குறளோவியம்!

மருந்தாகித் தப்பா மரத்தற்றாற் செல்வம் பெருந்தகை யான்கண் படின்.குறள்:217 செல்வம் ஒப்புரவு செய்யும் பெருந்தகையாளனிடம் சேருமேயானால், அச்செல்வம் எல்லா உறுப்புகளும் நோய்க்கு மருந்தாகித் தப்பாத மரத்தைப் போன்று பயன் தருவதாக அமையும்!

தாய்க்குப் பின் அன்புசெய்ய தாரம் இது பொய்யல்ல! தரணியில் அவளன்பை இழந்தோர் வாழ்வோ மெய்யல்ல! தாய் மகனை தன் கண்ணின் மணியாகப் பாதுகாத்து வளர்த்து அவனுக்கேற்ற வாழ்க்கைத் துணையினைத் தேர்ந்தெடுத்து அளித்து தன் வினை முடித்து நிறைவுறுகிறாள்! ஆனால் மனைவியோ அத்தாயின் பிள்ளையை தன் மனச் சிறையில் பாதுகாத்து அவன்தன் மனதறிந்து பணிசெய்து துன்பங்களை தானேற்று இன்பமொன்றே தன்பதிக்களித்து பின்தூங்கி முன்விழித்து குடும்ப பாரத்தை கொஞ்சமேனும் சலிப்பின்றி ஏற்று இன்றுவரை அத்தாயின் பிள்ளையைத் தன் பிள்ளையாய் பேணிக் காத்து நிற்கிறாள்! அத்தாய் வாழ்வில் ஒருபாதி எனைக் காத்தாள்! இல்லாள் இத்தாயோ என்னை வாழ்வின் இறுதிவரைக் காக்கின்றாள்! தாய்க்குப் பின் அன்புசெய்ய தாரம் இது பொய்யல்ல! தரணியில் அவளன்பை இழந்தோர் வாழ்வோ மெய்யல்ல!

எழுந்திடு தோழா! புதுவடிவெடு தோழா! துயர்மறந்திடு தோழா! வெற்றி அடைந்திடு தோழா!

நடந்தது எல்லாம் நன்மைக்கே! இனி நடக்கப் போவதும் நன்மைக்கே! எழுந்திடு தோழா!புதுவடிவெடு தோழா! நடந்ததை எண்ணி கலங்குவதாலே முன்னே நடந்தது எல்லாம் மாறிடுமோ? புது நன்மைகள் வந்துன்னைக் கூடிடுமோ? துயர் மறந்திடு தோழா! வெற்றி அடைந்திடு தோழா! (நடந்தது) எதுவும் உலகில் நிலையில்லை! பின் ஏனிங்கு வருத்தம் சரியில்லை! இங்கு கிடைத்ததை எண்ணி மகிழ்ந்திடுநீ! எதுவும் கிட்டாதாயின் அதை மறந்திடுநீ!   (நடந்தது) எதை நாமிங்கு கொண்டு வந்தோம்! எதை இழந்தோம் என்று கலங்குகிறாய்! இறுதியில் எவரும் இங்கிருந்து […]