Monthly Archives: April 2016

என்னவளின் பாதச்சுவடுகள்!

என்னவளின் பாதச்சுவடுகள்! என்னவளின் பாதச்சுவடுகள் அனைத்தும் எழிலோவியமாய் எனை வழிநடத்தும்! இல் இடையாள் நடந்திட்ட இச் சுவடுகள் என்னவளை நான் தொடர அவள் பொன்னடியால் எனக்களித்த நன்கொடைகள்! பாவையவள் பாதச் சுவட்டினை பாலமாய் நானமைத்து அவளைச் சேரும் வழி நானறிய செதுக்கிட்ட சிற்பம் இது! என்னவளின் பாதச் சுவடுகள் என்னை வழிநடத்தும் பொன்மலர்கள்!

செந்தமிழ் வாழியவே!

  செந்தமிழ் வாழியவே! எங்கள் செம்மொழி வாழியவே!என்றும் மங்கா புகழொடு புவி எங்கும் வலம் வரும் சங்கம் வளர்த்த உயர்த் தமிழ் மொழி வாழியவே! இயல்,இசை, நாடகம் எம்தமிழ் தந்த ஓவியம்! அழியாத காவியமாம் எவரும் அருந்திடும் வற்றா பாற்குடமாம் தேனினும் இனிதான எங்கள் தெள்ளுத் தமிழ் வாழியவே! கன்னல் கன்னடம்,கவின் மலையாளம் தெள்ளுத் தெலுங்குடன் துளுவும் உன் உதிரத்தால் உலவி நிற்கும் உயர் தனிச் சிறப்பா மெங்கள் தமிழ் மொழி வாழியவே! செந்தமிழ் வாழியவே! எங்கும் […]

இன்தமிழ் குறளோவியம்!

பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர் எழுபது கோடி உறும்.குறள்:639   தன் கட்சிக்காரராய் அருகிலேயே இருந்தும், நாட்டு நலனை எண்ணாமல் தன்னலமே எண்ணும் அமைச்சர், எழுபது கோடி எதிர்கட்சிக்காரருக்குச் சமம் ஆவார்.

இன்னா நாற்பது!

  உடம்பாடு இல்லாத மனைவி தோள் இன்னா; இடன் இல் சிறியாரோடு யாத்த நண்பு இன்னா; இடங்கழியாளர் தொடர்பு இன்னா; இன்னா, கடன் உடையார் காணப் புகல். 11 யாத்த – பிணித்த தொடர் – சேர்க்கை உள்ளம் பொருந்தாத மனைவியின் தோளினைச் சேர்தல் துன்பமாகும். விரிந்த உள்ளமில்லாத சிறுமையுடையாருடன் நட்பு கொள்ளுதல் துன்பமாகும். மிக்க காமத்தினை உடையாரது சேர்க்கை துன்பமாகும். கடன் கொடுத்தவரைக் காணச் செல்லுதல் துன்பமாம்.

பெருமை! “சிறுகதை”

பாலா மும்பையில் வசித்து வருகிறார். தன் மனைவி ஒரே மகனுடன் சொந்த ஊரான தூததுக்குடிக்கு வந்து தன் பெற்றோர்களுடன் சிறிதுகாலம் தங்குகிறார். அந்நாட்களில் அங்காங்கே வாழ்ந்துவரும் தங்கள் உறவினர் வீடுகளுக்கும் சென்று வருகின்றனர். எவ்வீட்டுக்குச் சென்றாலும் தாராளமாகப் பண்டம் பழங்கள் வாங்கிச் செல்லத் தவறுவதே இல்லை. செல்லும் வீடுகளில் எவர் வீட்டிலும் கை நனைப்பது இல்லை. மாறாக தங்கள் பெருமையினைக் காட்டுவதற்காக 500 ,1000 ரூபாய் நோட்டுகளை அசால்டாக எடுத்துக்கொடுப்பார்கள். மகனை ஆங்கிலவழி சேர்ப்பதற்காக 50000 நன்கொடை […]

பாவேந்தர் பாரதிதாசனார் பிறந்தநாள் இன்று!

வலியோர் வாழ்வதும் எளியோர் அவர்தம் கால்களில் வீழ்ந்து கிடப்பதும் என்றிங்கு ஒழியுமென உளங் கொதித்துப் பாட்டினால் கொலைவாளினை எடடா மிகு கொடியோர் செயலறவே எனப் பாடியே சென்றாயே! பாவியர் இன்னும் ஒழிந்திட்டப் பாடில்லை! மீண்டும் நீ பிறந்துவா பாவலரே! நின் கவியால் வஞ்சகரை கொன்றழித்து நன்னிலையாக்கிட வா! வாழ்த்துகிறேன் பாவேந்தரே! நின்புகழ் பாருளமட்டும் நிலைத்திருக்கும் !

இன்னா நாற்பது!

  பொருள் உணர்வார் இல்வழிப் பாட்டு உரைத்தல் இன்னா; இருள் கூர் சிறு நெறி தாம் தனிப்போக்கு இன்னா; அருள் இல்லார் தம் கண் செலவு இன்னா; இன்னா, பொருள் இல்லார் வண்மை புரிவு. 10 இல்வழி – இல்லாத இடத்தில் சிறுநெறி – சிறிய வழியிலே பொருள் அறியும் அறிவுடையார் இல்லாத இடத்தில் பாட்டுரைத்தல் துன்பமாகும். இருள் நிறைந்த சிறிய வழியில் தனியாகப் போகுதல் துன்பமாகும். அருள் இல்லாதவர்களிடம் இரப்போர் செல்லுதல் துன்பமாகும். அதுபோலப் பொருள் […]

இன்தமிழ் குறளோவியம்!

அறிகொன்று அறியான் எனினும் உறுதி உழையிருந்தான் கூறல் கடன்.குறள்:638 அறிந்து சொல்பவர் அறிவையும் மதியாமல், செய்யவேண்டிய வழிகளைத் தாமும் தெரியாமல், ஆட்சியாளர் இருந்தால், அக்குற்றம் கண்டு கோபம் கொள்ளாமல், அஞ்சாமல், அவருக்கு நன்மை தருவதைக் கூற வேண்டியது அமைச்சர் கடமையாகும். தன்மானம் ஏதுமின்றி தன்வருமானம் ஒன்றையே கருதி, அரசனோ, அரசியோ கூறுவதை அப்படியே சரணாகதி உணர்வோடு கேட்டு நெடுஞ்சாண்கிடையாய் வீழ்ந்துகிடக்கும் அமைச்சர்கள் கடமைதவறிய, தான்வாழ்ந்தால் போதுமென்ற சுயநலவாதிகளே ஆவர்.

‎ஏனோ‬ என் மனம் ஏங்குதே! இங்கு வாழ்ந்தது போதுமென தோன்றுதே!

‎ஏனோ‬ என் மனம் ஏங்குதே! இங்கு வாழ்ந்தது போதுமென தோன்றுதே! கூனிக் குருகி, வாடி வதங்கி, நாடி தளர்ந்து, நரம்பு புடைத்து இன்னும் எதற்கு வாழ்ந்திட வேண்டுமென ‎ஏனோ‬ என் மனம் ஏங்குதே! இங்கு வாழ்ந்தது போதுமென தோன்றுதே! முதுமை துன்பம் கொடிது! கொடிது! தனிமை துன்பம் அதனின் கொடிது! எவர்க்கும் உதவா வாழ்விது வாழ்வா? புவிக்குப் பாரமாய் வாழ்வது வீணே! ‎ஏனோ‬ என் மனம் ஏங்குதே! இங்கு வாழ்ந்தது போதுமென தோன்றுதே! மகனோ அருகில் இல்லை!இல்லை! […]

புவி வெப்பமடைதலை முற்றிலுமே தடுத்திடுவோம்!

பற்றி எறிவது நெருப்பா? இல்லை பாரினர் நம்மேல் கொண்டா வெறுப்பா? முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்! முன்னோரும் பின்னோரும் விதைத்தோம் மாசினை! மாசினால் புவியின்று பாழாகிப் போனது! ஓசோன் படலத்தில் ஓட்டையும் வீழ்ந்தது! சூரியக் கதிர்கள் சுட்டெரிக்கப் போகுது! நாளை இப்புவி அழிந்திடும் நிலையாகுது! என்செய்வோம் தோழரே என்றெண்ணுங்கள் ஒருநொடி! மரங்களை மகிழ்வுடன் நட்டே வளர்த்திடுவோம் மாசடையும் புவியினை விரைந்தே தடுத்திடுவோம்! மக்கும் குப்பைகளை மண்ணிலிட்டு மூடிடுவோம்! மக்கா குப்பைகளை மறுசுழற்சி யாக்கிடுவோம்! ஆலைக் கழிவுகளை ஆழப் […]