சிந்திப்பீர் சீர்தூக்கி! செயல்படுவீர் முழுவடிவாக்கி! வந்திடுவீர் களநோக்கி! வைத்திடுவீர் நல்லோட்டாக்கி! ஓட்டளிப்பது ஒவ்வொருவரின் தலையாய கடமை! அதனால் ஓடிடுவீர் ஓட்டினை குறையிலா நல்லோர்க்கு அளித்திடுவீர்!

  அன்பினில் கலந்து ஆருயிர் இணைந்து/ இன்பத்தில் திளைத்து ஈருடல் ஒன்றாகி/ பந்தமாய் வந்திட்ட பகலவனின் ஒளிபோல/ சொந்தமாய் யாம்பெற்ற எம்மகவெம் உயிர்நேசம்/ அரியநாயகிபுரம் ஆசிரியர் தேசிங்

  பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப் பேதை வினைமேற் கொளின்.குறள்:836 நேர்மை வழி அறியாத மூடர், மேற்கொண்ட செயலைத் தொடர முடியாமல், அதனால் அச்செயலும் கெட்டுத் தம்மையும் தண்டித்துக் கொள்வர்.

  கல்வியறிவில்லா காசுள்ளோனிடம் இன்றைய கல்விக்கூடங்கள்! அவன் வீசும் காசுக்காக அவனை கல்விக்கடவுள் என துதிக்கிறோம்! தாய் மொழியறியா மூடர்களிடம் வழிப்பாட்டு ஆலயங்கள்! புரியா மொழிகேட்டு உள்ளம் பூரிக்கும் வழிபடும் பக்த கோடிகள்! இல்லை தெய்வம் இல்லை என்று சொன்னோரெலாம் இன்று ஏகுகிறார் ஏமாற்ற இறை இவ்வம் நோக்கி!   சாதிக்கோர் கோயில் கட்டி ஓதுகின்றார் சமத்துவத்தை தேரிழுத்து சாதியத்தை கூவிக் கூவி விற்கின்றார்!   இறைவனவன் இரு்திருந்தால் இவர் இழிசெயலைப் பொறுப்பானோ? சமத்துவாய் கோயில் கட்டி […]

ஆத்தங்கரை ஓரத்திலே உன் அத்தை மகன் காத்திருக்கேன் சீக்கிரமாய் வந்திடுவேன் என சிரித்து வழியனுப்பினியே! காத்திருந்து காத்திருந்து என் கண்ணெல்லாம் பூத்ததடி! தாமதத்தின் காரணமென்ன என் தங்கம வந்து சொல்லிடடி! உச்சி முதல் பாதம் வரை உன்னழகை நான் ரசிக்கையிலே வெட்கமுடன் தலைகுனிவாய் கண்டு விண்ணிலவும் நாணுமடி! வந்திடடி சீக்கிரமாய் மடி தந்திடடி நானுறங்க! உன்இதழால் எனை வருடி என்வலியைத் தீர்த்திடடி! கொஞ்ச நாள் பொறுத்திடுங்க செஞ்சிக்கலாம் கல்யாணம் என்றாய் இனி தாமதியேன் பெண்கேட்டு மணமுடிப்பேன்! மாலையிட்டப் […]

குழப்பத்தில் தமிழகம்! யாரிங்கு நல்லவர்? நம்பியோர் அனைவரும் உயர்த்தினர் தன்னையே! நடிகரோ? அறிஞரோ? நற்கலை வல்லரோ? சொல்லோன்று செயலொன்று இல்லாமல் பொன்னான இந்நாட்டை வளமாக்க உழைப்போராய் வந்தால் நாம் வரவேற்போம்! ஏழையென்றும் பொருளால் மேதையென்றும் எண்ணாது நாட்டிற்கே என்பணி ஏற்கிறேன் என்றெண்ணி உழைப்பவர் தம்மையே அமர்த்துவோம் ஆட்சியில் மலரட்டும் தமிழகம்! இலஞ்சப் பேய்களை விரட்டி ஓட்டுவோம்! ஊழல் வாதிகளை ஊர்விட்டே ஓட்டுவோம்! மாற்றம் ஒன்றே நம்மைத் தேற்றும்! ரஜினியின் அரசியல்பிரவேசம் அளிக்குமா முன்னேற்றம்! பொறுத்திருந்து நாம் பார்ப்போம்! […]

  முயலே! வெள்ளை முயலே! அழகே! உந்தன் உருவே! தொடவே அருகில் வந்தேன்! துள்ளி ஓடு கின்றாய்!   உன்னைப் போல எந்தன் உள்ளம் வெள்ளை தானே களளம் இல்லை என்னில் கண்ணாய்க் காப்பேன் உன்னை! வாவா! வெள்ளை முயலே! வலமாய் வருவோம் உலகை! கள்ளம் இல்லா அன்பில் களிப்போம் ஒன்றாய் நாமும்!

  புன்னகைப் பூக்களாய்ப் புத்தாண்டு மலரட்டும்! இன்னல்கள் எவர்க்குமிலா ஆண்டாக மலரட்டும்!   உழைப்பவர் உவந்திட ஏய்ப்பவர் கிலியுற ஏழைகள் இல்லமெலாம் இல்லாமை ஒழியட்டும்!   உழைப்பிலா ஊதியம் உதறியே தள்ளுவோம்! இலவசம் பெறுவதை எள்ளியோ நோக்குவோம்!   கொடுப்பதில் மகிழுவோம்! கொஞ்சியே பேசுவோம்! அன்பினால் அகிலத்தை ஆனந்த மாக்குவோம்!   உள்ளுவோம் உயர்வினை உலகு உன்னதமாகிட பாவியர் மனமெலாம் பரிசுத்தம் ஆகனும்!   வாவா! புத்தாண்டே! வாழ்த்துகிறோம் உன்னையே! தாதா! நல்மதி! வாழ்வோமே நலமுடன்!

புத்தாண்டே வருக! உளம் பொங்கும் அன்பில் மகிழ்க! எத்திக்கும் ஒளிர்க! ஏழை இன்னல்கள் ஓடி மறைக! அரசியல் சாயம்பூசி தினம் அல்லல்கள் மட்டுமே தருகின்ற பொல்லார் பொடிப்பொடியாகி இங்கு இல்லா தொழிந்து மறைக! எத்தனை எத்தனை இடையூறு அத்தனையும் பொறுத்து கடந்திட்டோம் நல்லோர் பலரை இழந்திட்டோம்! நயவஞ்சகரையும் அடையாளங் கண்டிட்டோம்! பிறந்திடு ஆண்டே பெருமையாய்! உயர்த்திடு அன்பால் உலகினை! அனைவரும் ஒன்றாய் இணைவோமே அருளின் ஊற்றில் நனைவோமே! தீமைகள் இல்லா உலகாக ஏழைகள் இல்லம் திருவாக மாற்றிடும் […]