தொட்டில்!

தொட்டில்!

தொட்டிலினை ஆட்டிடவே மிகத்
துள்ளிடுதே என் மனது!
கட்டிலினில் தூக்கமில்லை என்
கைகள் ஏங்கி வேண்டிடுதே!

குன்றளவு செல்வம் கொண்டோர்
குழந்தை செல்வம் இல்லையென்றேல்
என்ன பயன் கண்டிடுவார்?
ஏக்கங் கொண்டே ஏங்கிடுவார்!

மண்குடிசை யானாலும் அழகு
மாளிகையே யானாலும் தொட்டில்
ஆடா வீடென்றால் இன்பம்
துள்ளி விளையாடிடுமோ?

ஆட வேண்டும் தொட்டிலிங்கு!
ஆராரோ பாட்டுப் பாடி!
ஆடும் தொட்டில் இல்லமெலாம்
ஆனந்தமே என்றென்றும்!

Leave a comment